21-4-22/15.00PM
புதுதில்லி ; புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சர்வதேச மையத்தில் இன்று நடைபெற்ற 13ஆவது தேசிய புலனாய்வுமுகமை தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர் மோடி அரசில் சகிப்புத்தன்மை இல்லை என கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர் ” பயங்கரவாதம் என்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல். பயங்கரவாதத்தின் மீது மோடி அரசு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடித்து வருகிறது. இந்த நேரத்தில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரறுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை பாராட்டுகிறேன். ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதற்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் அம்மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பெரிதும் உதவின.
என்.ஐ.ஏ உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை 400 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேநேரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 349 வழக்குகளில் 93.25 சதவிகித தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டங்களை வலுப்படுத்தியுள்ளது.வெளிநாடுவாழ் இந்தியர்கள் பாதிக்கப்படும் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் உரிமையை மத்திய அரசு ஏஜென்சிக்கு பெற்றுத்தந்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடக்கும்போதெல்லாம் சில மனித உரிமை குழுக்கள் மனித உரிமை பிரச்சினையை எழுப்புகின்றன. ஆனால் மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய காரணம் என நான் கருதுகிறேன். மனித உரிமையை பாதுகாக்க பயங்கரவாதத்தை அதன் வேரோடு அழிக்கவேண்டியது அவசியம்” என கூறினார்.
…..உங்கள் பீமா
