Thursday, May 21, 2026
Home > செய்திகள் > இது கொஞ்சம் ஓவர் தான்..! கிடுகிடுத்துப்போன மாதவரம் நீதிமன்றம்

இது கொஞ்சம் ஓவர் தான்..! கிடுகிடுத்துப்போன மாதவரம் நீதிமன்றம்

21-4-22/11.22AM

சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்திவருகின்றன. ஆளும்கட்சி கவுன்சிலர்களே சாதாரண பாமர மக்களை மிரட்டி சொத்தை அபகரிப்பதும் மணல் கொள்ளையில் ஈடுபடுவதும் காவல்துறையை மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது.

மேலும் கொலை கொள்ளை கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்ந்து பெருகிவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் மீது தாக்குதல் நடத்த முயல்வதும் நீதிபதிகள் மீது கொலை முயற்சிகள் நடப்பதும் தமிழக மக்களை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனிடையே சென்னை மாதவரம் நீதிமன்றத்தில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் எனும் நபர் தான் மது அருந்திவிட்டு திரும்பியபோது மூன்று நபர்கள் தன்னை தாக்கியதாக புகாரளித்தார். போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைதுசெய்தனர். பின்னர் மூன்றுபேரையும் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை பழிவாங்கும் நோக்கில் நீதிமன்ற வளாகத்திற்குள் விக்னேஸ்வரன் வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த போலீசார் தங்கள் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்ட விக்னேஸ்வரன் தப்பியோடினான். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாதவரம் ரவுண்டானா பகுதியில் சுற்றித்திரிந்த விக்னேஸ்வரனை போலீசார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

…..உங்கள் பீமா