1-12-21/16.40pm
செம்மஞ்சேரி : முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைத்த ஒருவர் செய்த உடலசைவு மற்றும் நிறம் மாற்றி போட்ட உடை மற்றும் அந்த நபரின் பேச்சு தற்போது இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
முதல்வர் முக ஸ்டாலின் தனது ட்விட்டரில் “அலர்மேல்மங்காபுரம் மக்கள் நேற்று என்னிடம் தெரிவித்த குறைகள்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அடுத்த 10 நிமிடத்தில் குடிநீர், பால், உணவு ஆகியவை வழங்கப்பட்டதாகவும்; வெள்ளநீரும் அகற்றப்பட்டதாகவும் இன்று நான் நேரில் சந்தித்தபோது தெரிவித்து மகிழ்ந்தார்கள்” என குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் முதல்வரிடம் பேசும் நபர் தெளிவாக மனப்பாடம் செய்து ஒப்பித்ததுபோல மடமடவென ஒப்பித்தார். மேலும் முதல்வர் கேள்விஎழுப்புமுன் கடகடவென கையை காலை அசைத்து எங்களுக்கு சாலை போட்டு கொடுத்தார்கள். மின்சார வசதி ஏற்படுத்தி தந்தார்கள் பால் கொடுத்தார்கள் என மூச்சுவிடாமல் பேசி முதல்வரையே திகைக்க வைத்தார்.
அதே நபர் அடுத்த வீடியோவில் குரலை மாற்றி போட்டிருந்த டி ஷர்ட்டின் கலரை மாற்றி மீண்டும் வந்து எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டது என பழைய பல்லவியை மாற்றாமல் பாடினார். முதல்வரே அசந்து போகுமளவுக்கு பேசிய அந்த செம்மஞ்சேரி நபர் யார் என நெட்டிசன்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். மேலும் சோழிங்கநல்லூர் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் சாலைகள் இன்னும் மழைநீர் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
….உங்கள் பீமா