Tuesday, April 22, 2025
Home > அரசியல் > தெறிக்கவிட்ட பிஜேபி தேர்தல் வாக்குறுதிகள்..! போட்றா வெடிய மக்கள் கொண்டாட்டம்

தெறிக்கவிட்ட பிஜேபி தேர்தல் வாக்குறுதிகள்..! போட்றா வெடிய மக்கள் கொண்டாட்டம்

8-2-22/15.00PM

டெல்லி : உத்திரபிரதேச தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிஜேபி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் விவசாயிகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு நலத்திட்டங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது மட்டுமில்லாம தொழிற்துறை திட்டங்களை விரைவுபடுத்தவும் உறுதியளித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “இது வெறும் உறுதிபத்திரம் மட்டுமல்ல உத்திரபிரதேச அரசின் தீர்மானம். கடந்த 2017ல் 212 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு 95 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சொல்வதை செய்கிறோம்” என தெரிவித்தார்.

`

பிஜேபி தனது தேர்தல் வாக்குறுதியில் “அடுத்த ஐந்தாண்டுகளில் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு இலவச மின்சாரம்.கோதுமை மற்றும் நெல் கொள்முதலை எம்.எஸ்.பி. முறையில் செயல்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகையை 14 நாட்களுக்குள் சர்க்கரை ஆலைகள் தரத்தவறினால் ஆலைகளிடம் இருந்து வட்டி வசூல் செய்யப்படும்.திறமையான மாணவிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும்.

```
```

ஸ்வாமி விவேகானந்தர் யுவ யோஜனா திட்டத்தின் கீழ் 2கோடி டேப்லட்டுகள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும். லவ் ஜிஹாத்தில் ஈடுபடுபவருக்கு பத்து ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்” என பிஜேபி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

…..உங்கள் பீமா