Friday, March 29, 2024
Home > அரசியல் > அட..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவன்..??

அட..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவன்..??

23-11-21/5.48am

சென்னை : பிஜேபியின் முதலமைச்சர் வேட்பாளராக திருமாவளவனை நிறுத்த நடத்தப்பட்ட முயற்சியில் பிஜேபியை தவிர்த்ததாக திருமாவளவன் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.

அரசியலில் பொய் பேசுவது என்பது அதுவும் திராவிடம் பேசும் கட்சிகள் பொய் பேசுவது என்பது வாடிக்கையான ஒன்று. அதிலும் சீமான் வைகோ திருமாவளவன் போன்றோர்களின் பேச்சுக்கள் செவ்வாய் கிரகத்தில் டைனோசருடன் சண்டையிட்டு சமூக நீதியை நிலைநாட்டியது போல இருக்கும்.

திருமாவளவன் நேற்று அளித்த பேட்டியொன்றில் ” நான் மக்கள்நல கூட்டணியில் இருந்தபோது பிஜேபி தலைமை என்னை அந்த கூட்டணியை விட்டு வெளியே வர நிர்பந்தித்தார்கள். என்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துகிறேன் என கூறி நிர்பந்தித்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.

`

பிஜேபி நூறு வருடங்களுக்கான செயல்முறையை திட்டமிட்டுள்ள கட்சி. யாரை மேலே கொண்டுவர வேண்டும். யாரை அழிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.” என பேட்டியளித்தார். இந்த பேட்டியெடுத்த நிருபர் என கூறிக்கொள்ளும் ஒருவர் தனது கேள்விகளில் பிஜேபி அப்படி சொன்னதற்க்கான ஆதாரம் எதுவும் உண்டா என அழுத்தமாக கேட்க மறந்துவிட்டார்.

```
```

எதையும் சொல்லலாம் யாரும் கேட்கமாட்டார்கள் என்கிற தைரியத்தில் திருமாவளவன் போல அரசியல் தலைவர்கள் அடுக்கடுக்கான கட்டுக்கதையை அவிழ்த்துவிடுவது சமூகத்தில் அவர்கள் மீதுள்ள மரியாதையை சீர்குலைக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணரவேண்டும். மேலும் இதே திருமாவளவன் ராஜபக்சே ஓடிவந்து தன்னிடம் கைகொடுத்தார் என்று பொய் கூறி அந்த ராஜபக்சேவிடம் இவரே ஓடி சென்று கைகொடுத்த வீடியோ வெளியானதும் வரலாறு.

…..உங்கள் பீமா