8-2-22/13.40pm
கோயம்புத்தூர் : தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 தொடங்க உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. இந்த முறை போட்டியின்றி பிஜேபி கமுதியில் ஒரு இடமும் நாகர்கோவில் பகுதியில் இரண்டு இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளரான சர்மிளா சந்திரசேகர் என்பவருக்காக பிஜேபி கோயம்புத்தூர் தலைமை விட்டுக்கொடுத்ததாக பகீர் குற்றசாட்டு எழுந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள 25 மண்டலங்களில் 23 நகர்புரத்திலும் மூன்று கிராமப்புறத்திலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி வார்டு எண் 38ல் அமிர்தவல்லி (திமுக) ஆனந்தி (நாம் தமிழர்), ஷர்மிளா (அதிமுக), சாந்தி (ம.நீ.ம), விஜயலட்சுமி (அமமுக) , சுஜாதா (பாஜக) வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் பிஜேபியை சேர்ந்த வேட்பாளர் சுஜாதாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்பாளர் நகர்ப்புற மணடலத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரி தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிஜேபி வேட்பாளரான சுஜாதா சோமையம்பாளையம் உள்ளாட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பிஜேபி கோயம்புத்தூர் மாவட்ட தலைமைக்கு தெரியும் எனவும் அதிமுகவுக்காக உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருக்கும் சுஜாதா 2019 மற்றும் 2021 தேர்தல்களிலும் சோமையம்பாளையத்தில் இருந்தே வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற உள்ளாட்சியை சேர்ந்த இந்த வேட்பாளர் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடமுடியாது என்று மாவட்ட தலைமைக்கு தெரியாதது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது என பிஜேபி தொண்டர்கள் விமர்சனத்தை முன்வைக்கின்றனர்.

2014 ஊட்டி தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பிஜேபி தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட குருமூர்த்தி என்பவரது வேட்புமனுவும் இதே போல ஒரு காரணத்திற்க்காக நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிலரது சுயலாபத்திற்காக இந்தியாவின் மிகப்பெரிய கட்சியும் அதிக தொண்டர்களை கொண்ட கட்சியான பிஜேபியின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதுபோல செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோயம்புத்தூர் பிஜேபி தொண்டர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
….உங்கள் பீமா