குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி அபார வெற்றிபெற்றுள்ளது. 2011 தேர்தலை விட இரண்டரைமடங்கு வெற்றியின் சதவிகிதம் உயர்ந்துள்ளதாக குஜராத் பிஜேபியினர் உற்சாகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
2011 தேர்தலில் காங்கிரஸ் 18 இடங்களும் பிஜேபி 15 இடங்களும் வெற்றி பெற்றிருந்தன. 2016 ல் பிஜேபியும் காங்கிரசும் சரிசமமாக 16 சீட்டுகள் ஜெயித்திருந்தன. காங்கிரசின் தவறான கொள்கை மற்றும் உட்கட்சிப்பூசல்களால் வெறுத்து போயிருந்த மக்கள் இந்த 2021 தேர்தலில் 43 சீட்டுகள் பிஜேபிக்கு அள்ளிக்கொடுத்திருக்கின்றனர். 3 சீட்டுகள் காங்கிரசுக்கும் ஒரு சீட்டு ஆம் ஆத்மீக்கும் கிடைத்திருக்கிறது.
இந்த வெற்றிக்கு காரணம் CR பாட்டீல் மற்றும் பிஜேபி தொண்டர்களே என குஜராத் பிஜேபி தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் மத்திய மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களை தொகுதிவாரியாக அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த தொண்டர்களுக்கும் நன்றிகள் என தெரிவித்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ##GandhinagarMunicipalElection என ட்ரெண்டாகி வருகிறது.
…உங்கள் பீமா
#gandhinagarmunicipalelection #gujarat