23-11-21/11.41am
நாகர்கோவில் : கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் திமுக அறிவித்திருந்தது. ஆனால் இரண்டாயிரம் மட்டும் ரேஷனில் வழங்கியது. அதை வாங்கிய ஒரு பாட்டி சந்தோசமாக சிரிப்பதாக புகைப்படம் எடுத்து திமுக ஐடி விங் தமிழகமெங்கும் பரப்பியது.
ஆனால் அந்த பாட்டியின் அவலநிலை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னலில் சிக்கிய தமிழக மக்களில் அந்த பாட்டியும் ஒருவர். அந்த பாட்டியின் பெயர் வேலம்மாள். அந்த பாட்டிக்கு வெல்ல நிவாரண உதவிகள் கிடைக்காமல் அவதியுற்று வந்த நிலையில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான எம்ஆர் காந்தி அவர்களும் பிஜேபி துறைமுக தொகுதி சட்டமன்ற வேட்பாளர் வினோஜ் அவர்களும் தக்கலையில் நடைபெற்ற போராட்டத்தில் நேற்று மாலை கலந்துகொண்டனர்.
அதன் பிறகு நாகர்கோவில் புத்தேரி கலுங்கெடியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட வேலம்மாள் பாட்டியை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினர். இதுகுறித்து வினோஜ் தனது ட்விட்டரில் ” அன்று பாட்டி வேலம்மாள் அவர்கள் தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண உதவியை பெற்றபோது, இல்லாத உலக சாதனை செய்ததுபோல திமுக உடன்பிறப்புகள் தம்பட்டம் அடித்தார்கள். ஒருபடி மேலே சென்று புகைப்படம் எடுத்த நபரை நேரில் அழைத்தும் பாராட்டினார் முதல்வர் முக.ஸ்டாலின்.

ஆனால் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கண்ணீர் மல்க உதவிகோரியும் அவரின் கூக்குரல் மட்டும் திமுகவினருக்கு கேட்கவே இல்லை.நாம் இன்று அவரை நேரில் சந்தித்து தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினோம். அவர் சிரிப்பில் இறைவனை கண்டோம்” என தெரிவித்துள்ளார்.
புகைப்படத்துக்காக திமுக சுட்ட வடை இது என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
…..உங்கள் பீமா