29-11-21/6.08am
சென்னை : சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அடுத்த தலைமையேற்பார் என அமைச்சர் ஒருவர் கூறியது திமுகவில் சலசலப்பை உண்டுபண்ணியுள்ளது.
சென்னை கன்னியாகுமரி தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தமிழக்த்தின் முக்கியமான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்க நேற்று முன்தினம் திமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவரை சந்திக்க சென்றிருந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல செல்லாத அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி பிறந்த நாளை திமுகவினர் மனிதநேய உதய நாள் என கூறியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. உதயநிதி பிறந்தநாளுக்கு வாழ்த்து செல்ல அவரது இல்லத்திற்க்கே சென்ற திமுக மூத்த நிர்வாகிகள் அங்கே அவர் வாழ்த்தி பேசினர்.
அதில் அமைச்சர் எ.வ வேலு ஒருபடி மேலேபோய் செய்தியாளாளர்களிடம் ” திமுகவில் ஸ்டாலினுக்குப் பின் வெற்றிடம் வந்துவிட கூடாது என்பதற்க்காகத்தான் விழா எடுத்தோம். தமிழினத்திற்கு உதயநிதி தேவைப்படுகிறார். பிறந்த நாள் விழா எடுத்தால் அவருக்கு உந்து சக்தி ஏற்படும். அவருக்கு இளைய சூரியன் மூன்றாம் கலைஞர் திராவிட சூரியன் போன்ற அடைமொழிகள் கொடுக்கப்பட்டன.” என தெரிவித்தார்.
முக ஸ்டாலினுக்கு பிறகு தலைமை ஏற்க கட்சியில் பல மூத்த நிர்வாகிகள் இருக்கையில் உதயநிதியை இப்போதே தூக்கிப்பிடித்து தனியாக ஒரு கோஷ்டி அமைக்கிறார்கள் என திமுகவின் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
….உங்கள் பீமா