Friday, June 9, 2023
Home > செய்திகள் > அடுத்த யுனெஸ்கோ..! இங்கிலாந்து பாராளுமன்றத்தில் திமுக அமைச்சருக்கு விருதா..!?

அடுத்த யுனெஸ்கோ..! இங்கிலாந்து பாராளுமன்றத்தில் திமுக அமைச்சருக்கு விருதா..!?

28-11-21/ 18.20pm

சென்னை : இங்கிலாந்து பாராளுமன்றத்தில் திமுக அமைச்சருக்கு விருது வழங்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இதுவும் அடுத்த யுனெஸ்கோ விருதா என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏற்கனவே திராவிடத்தால் பெரிய தலைவர் என்று புகழப்படும் ஒருவருக்கு யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டதாக திக மற்றும் திமுகவினரால் பொய்யான தகவல் பரப்பப்பட்டது.(அவரின் பெயரை தவிர்ப்பது குண்டாசில் இருந்து தப்பிக்கவே என புரிந்து கொள்க). அதை மாரிதாஸ் எனும் எழுத்தாளர் ஆதார பூர்வமாக நிரூபித்தார்.

அதையடுத்து இந்தியாவின் முதன்மையான முதல்வர் என முக ஸ்டாலின் பெயர்பெற்றிருப்பதாக செய்திகள் உலவுகிறது. ஆனால் அதை எந்த நிறுவனம் வழங்கியது அல்லது எந்த அரசுக்கு சொந்தமான நிறுவனம் வழங்கியது இல்லையெனில் தேசிய ஊடகங்களின் கருத்து கணிப்பா என்ற எந்த ஒரு செய்தியும் இல்லை. இது திமுகவின் பாணி.

`

இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயல்பட்டதாக கூறி தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிறது. ஆனால் கொரோனா தொற்று இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கை செய்திகளில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது வழங்கப்பட்டது என கூறப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையென்னவெனில் இங்கிலாந்தில் உள்ள உலக தமிழ் நிறுவனம் எனும் அமைப்பு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவரான ஜேக்கப் ரவிபாலன் இந்த விருதை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கத்தில் வைத்து வழங்கினார்.

அந்த அரங்கத்தின் பெயர் ஹவுஸ் ஆப் காமன்ஸ் என்பதாகும். இந்த விருதை மா.சுப்பிரமணியனின் மகனான டாக்டர் செழியனும் அவரது குடும்பத்தினரும் பெற்றுக் கொண்டனர். பத்திரிக்கைகளில் இங்கிலாந்து நாடாளுமன்றமே விருது கொடுத்ததாய் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

…..உங்கள் பீமா