8-11-21/ 11.32am
தேனி : தேனியில் பிஜேபி சார்பில் நடைபெறும் போராட்டத்தை திசை திருப்ப முயல்வதாக IT விங் மாநில தலைவர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றசாட்டை எழுப்பியுள்ளார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை திமுக வஞ்சிப்பதாக தமிழக விவசாயிகள் முறையிட்டதை தொடர்ந்து தமிழக பிஜேபி சார்பில் தலைவர் அண்ணாமலை அவர்கள் தேனியில் விவசாயிகளுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து இன்று அண்ணாமலை தலைமையில் விவசாயிகள் மற்றும் பிஜேபி தொண்டர்கள் தேனியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்( நிர்மல் அவர்கள் கூற்றுப்படி). இந்த போராட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுவிட கூடாது என்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வெங்கடேசன் எம்பி அவதூறு கருத்துக்களை கூறி போராட்டத்தை திசைதிருப்ப முயல்வதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து நிர்மல் அவர்கள் “மீண்டும் ஒரு பொய் வெங்கடேசன். இதுவரை கேரள கம்யூனிஸ்டுகளின் அட்டூழியத்திற்கு வாய் திறக்காத வெங்கடேசன் இன்று தேனியில் அண்ணாமலை அவர்களின் முற்றுகை போராட்டத்தை திசை திருப்பவே இந்த பொய்யான குற்றச்சாட்டை அவிழ்த்து விட்டுள்ளார்.” என பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.
…..உங்கள் பீமா