Monday, December 2, 2024
Home > அரசியல் > பெருமை பேசும் திமுக அமைச்சரை குறிவைக்கிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி..!

பெருமை பேசும் திமுக அமைச்சரை குறிவைக்கிறாரா டாக்டர் கிருஷ்ணசாமி..!

28-11-21/10.58am

சென்னை : புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பெருமை பேசி வரும் திமுக அமைச்சர் ஒருவரை மறைமுகமாக சாடியுள்ளார்.

திமுக அமைச்சர்கள் சிலர் நிருபர்கள் பொதுமக்கள் மற்றும் சக கூட்டணி எம்பிக்கள் ஆகியோரை தரக்குறைவாக பேசிவருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏழை விவசாயி ஒருவரை அநாகரிகமாக பேசி முறைத்தது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அமைச்சர் நாசர் ஒரு படி மேலே போய் விவசாயி ஒருவரின் கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டது சர்ச்சைக்குள்ளானது.

`

திமுகவின் அமைச்சர் ஒருவர் எப்போது பேசினாலும் எந்த மேடையில் பேசினாலும் ஏன் நிருபர்களிடம் பேசினாலும் தனது பரம்பரை புகழ் பற்றி பத்து நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் அடுத்த விஷயத்தை பற்றி பேசுவார். இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் திமுக அமைச்சரை மறைமுகமாக சாடியுள்ளார்.

```
```

டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு கூட்டத்தில் பேசுகையில் “ஆங்கிலேயரை அண்டிப் பிழைத்தவர்கள், அப்போது அப்பா அமைச்சராக ஆகியிருப்பார், தற்போது மகன் அமைச்சராக இருக்கலாம் ஆனால், அதுவெல்லாம் வரலாறு ஆகாது. சுதந்திரத்திற்காக பாரதி பசியோடும், பட்டினியோடும் பாடினர் என்றால் அது தான் வரலாறு ஆகும்” என தெரிவித்துள்ளார்.

…….உங்கள் பீமா