31-1-22/14.45pm
லக்னோ : இஸ்லாமிய மதகுருவான தௌஹிர் ராசா கானின் மருமகள் நேற்று பிஜேபியில் இணைந்தார். இது சிறுபான்மையின வாக்குகளை குறிவைத்து இறங்கிய சமாஜ்வாடிக்கும் காங்கிரசுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.
சமூக செயற்பாட்டாளராக இருக்கும் நிதா கான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்ப்பவர். முத்தலாக் விஷயத்தால் பாதிக்கப்பட்டு முத்தலாக் தடை விவகாரத்தில் முதல் வழக்கு தொடுத்தவர் இந்த நிதா கான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாரதபிரதமர் மோடியை தரமற்ற வார்த்தைகளில் பேசி அதற்காக வழக்கை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் தான் காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த நிதா கான் ” பிஜேபியில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மோடி அவர்களுக்கு என் நன்றிகள். முத்தலாக் தடை சட்டத்தால் பயன்பெற்ற முதல் பெண் நானே. இந்த சட்டத்தால் பல பெண்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் சமாஜ்வாடி மூத்த தலைவர்களுள் ஒருவரான ஷிவ் சரண் பிரஜாபதி அதிலிருந்து விலகி இன்று பிஜேபியில் இணைந்துள்ளார். பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் பிஜேபி மாநில தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் மற்றும் மாநில துணை முதல்வர் மௌர்யா தலைமையில் பிஜேபியில் இணைந்துள்ளனர். தேர்தல் தேதியும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த சம்பவம் உத்திரபிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அமித்சா உத்திரபிரதேசத்தில் பரப்புரை மேற்கொண்டதோடு சில தலைவர்களையும் சந்தித்திருந்தார். அதையடுத்து நடந்த இந்த அரசியல் மாற்றம் எதிர்கட்சியினரை கலக்கமடைய செய்துள்ளது. அடுத்தடுத்த தலைவர்கள் பிஜேபியில் இணைவது கட்சிக்கு மேலும் பலத்தை சேர்ப்பதாக பிஜேபியினர் கூறிவருகின்றனர்.
….உங்கள் பீமா