Saturday, October 5, 2024
Home > அரசியல் > பேசவிடாமல் விரட்டியடித்த திமுக எம்பிக்கள்..? கெஞ்சிய ஆ.ராசா..!

பேசவிடாமல் விரட்டியடித்த திமுக எம்பிக்கள்..? கெஞ்சிய ஆ.ராசா..!

2-12-21/11.57am

டெல்லி : ஆ.ராசாவை பேசவிடாமல் திமுக எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் கூச்சலிட்டு விரட்டியடித்தனர்.

பாராளுமன்றத்தில் கடந்த வருடம் போல திட்டமிட்டு முடக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. திமுக எம்பிக்கள் மற்றும் சிலர் அவையில் தொடர்ந்து கூச்சலிட காங்கிரஸ் மற்றும் சிவசேனா திரிணாமூல் எம்பிக்கள் ஒருவரையொருவர் தாக்குவதும் காகிதங்களை கிழித்து எறிவதும் சேர்களை தூக்கியெறிவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவை பாதுகாவலர்கள் மீது தாக்குதல் தொடுத்தும் கண்ணியமற்ற முறையில் நடந்துவருகின்றன. இதனால் சபாநாயகர் 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் கூட்டத்தொடர் ஊதியம் மற்றும் இதர சலுகைகளை நிறுத்தி உத்தரவிட்டார்.

`

இந்நிலையில் அவையின் சிறப்பு சபாநாயகராக சிறிது நேரம் திமுகவை சேர்ந்த எம்பி ஆ.ராசா அமர்த்தப்பட்டார். அப்போது திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் கூச்சலிட்டவாறே கலைந்து சென்றனர். ஆ. ராசா அனைவரையும் அமைதியாக உட்காரும்படி கெஞ்சியும் திமுக எம்பிக்கள் கூட மதிக்காமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

```
```

மத்திய அரசிடம் தமிழகத்தில் இருந்து கொண்டே மீடியாக்களின் மூலம் கோரிக்கைகளை எழுப்பும் திமுகவினர் அவையில் எந்த ஒரு கோரிக்கையும் எழுப்பாமல் மௌனமாக இருப்பது ஏன் என தமிழக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

….உங்கள் பீமா