Monday, February 10, 2025
Home > அரசியல் > கவர்னரின் அக்கவுண்ட்டை பிளாக் செய்த முதல்வர்…! ரொம்ப படுத்தறார்பா.!?

கவர்னரின் அக்கவுண்ட்டை பிளாக் செய்த முதல்வர்…! ரொம்ப படுத்தறார்பா.!?

31-1-22/16.50pm

மேற்குவங்கம் : தமிழக திமுகவுக்கே பாடம் எடுக்கும் அளவிற்கு சர்வாதிகாரப்போக்கு மனநிலையை கொண்டவர் மமதா. ஒரு திரைப்படத்தில் வரும் ” ஓட்டு போடாதவன் எல்லாரையும் வரிசைல நிக்க வச்சு காத கடிச்சு துப்பிடுவாண்டா அவன்” என்ற வசனத்திற்கு ஏற்றவகையில் நடந்துகொள்பவர் மமதா என பலர் விமர்சித்து வருகின்றனர்

கடந்த சட்டமன்ற தேர்தலில் பங்களாதேசிகள் மற்றும் அகதிகள் வாக்குகளால் வெற்றி பெட்ரா மமதா ஆட்சிப்பொறுப்பேற்ற முதல்நாளே இரண்டரை லட்சம் மக்களை அகதிகளாக ஓடாவிட்டார். பல கொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் காரணகர்த்தாவாக இருந்தார் என பிஜேபியினர் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகின்றனர்.

தேர்தல் நேர கலவரங்களை பார்வையிட சென்ற மனித உரிமை ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அதிகாரிகள் ஆகியோர் திரிணாமுல் குண்டர்களால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் பார்வையிட சென்றபோது திரிணாமுல் குண்டர்களால் முற்றுகையிடப்பட்டார்.

`

இதனிடையே மாநில அரசின் தவறான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து ஆளுநர் ஜெகதீப் தங்கர் கடுமையாக சாடிவந்தார்.

```
```

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பேசிய மமதா “காலையில் எழுந்ததும் நம்மை குறை கூறி வருவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். மாலை வரை அதையே கடமை என நினைக்கிறார். அவர் ஏதோ பெரிய முதலாளி போலவும் நாம் அவரிடம் பத்திரம் எழுதிக்கொடுத்த அடிமைகள் போலவும் நினைக்கிறார். அதனால் நான் அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் செய்துவிட்டேன்” என கூறியுள்ளார். மமதாவின் இந்த செயல் பலரை அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறது.

….. உங்கள் பீமா