6-3-22/12.05pm
சென்னை : கடந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பிஜேபி சார்பில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற உமா ஆனந்தன் தனது வார்டில் அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். இந்த அலுவலகத்தை திறந்துவைக்க பிஜேபியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அதன் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.


சென்னை மாவட்டம் மாம்பழம் தொகுதி 134ஆவது வார்டில் வெற்றி பெற்றதையொட்டி இன்று மக்கள் குறைதீர்ப்பு அலுவலகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.

இந்த அலுவலகத்தை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை திறந்துவைக்கிறார். இந்த விழாவில் ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டுள்ளனர்.

அலுவலகத்தை பிஜேபி தலைவர் அண்ணாமலை திரண்டு வைத்து தொண்டர்களிடையே உரையாற்றுகிறார். மேலும் தற்போது அந்த பகுதியில் பொதுமக்கள் அண்ணாமலையை காண கூடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

……உங்கள் பீமா