Monday, December 2, 2024
Home > அரசியல் > திமுக ஊராட்சி தலைவரின் சாதிவெறி…? ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம்..!

திமுக ஊராட்சி தலைவரின் சாதிவெறி…? ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம்..!

24-11-21/15.09pm

ஸ்ரீபெரும்புதூர் : இன்று ஸ்ரீபெரும்புதூரில் அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி சார்பில் தலைவர் சாலமன் தலைமையில் திமுக ஊராட்சி தலைவரின் சாதிய வெறியை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பால்நல்லூர் ஊராட்சித்தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த நேரு. இவர் ஊராட்சியில் பணிக்கு பண்ணைக்காரர்களை நியமித்தல் வேலைக்காரர்களை நியமித்தல் என்று நோட்டிஸ் அச்சடித்து விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே ஊராட்சி தலைவர் நேரு அந்த நோட்டிஸை விநியோகம் செய்து சாதிய ரீதியான தாக்குதலை தொடுக்கிறார் என அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணியினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

`

மேலும் நேருவின் சாதிய போக்கை கண்டித்து அவர் மீது 1989 எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று பால்நல்லூர் திமுக ஊராட்சி தலைவர் நேருவை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றுவருகிறது.

```
```

இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு பேசினர். ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர். திராவிடம் சாதியை ஒழித்தது என கூறும் திமுகவினரே சாதிய மனநிலையில் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு கூட்டத்தில் நாயுடு மக்கள் இல்லாமல் அரசியல் இல்லை என திமுக அமைச்சர் நேரு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா