31-1-22/13.15pm
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் அறியலூரை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னை கட்டாய மதமாற்றம் செய்ய முயல்வதாக கூறி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த வழக்கில் இறந்த மாணவியின் வாக்குமூல வீடியோ இருந்தபோதிலும் திராவிடக்கட்சிகள் அதை திசைதிருப்பும் முயற்சியிலேயே ஈடுபட்டிருப்பதாக பிஜேபியினர் விமர்சித்து வந்தனர்.
மத அரசியலை கையிலெடுக்கிறது பாஜக என திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் கூக்குரலிட்டது. முதல்வர் முக ஸ்டாலின் ஒருபடி மேலேபோய் பாஜக போன்ற மதவாத கட்சியை ஆதரிக்காதீர்கள் என பேட்டியளிக்கும் அளவிற்கு பிஜேபி தனது நிலைப்பாட்டில் உறுதியாய் நின்றது. பிஜேபி தொடக்கம் முதலே சிபிஐ விசாரணை இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நியாயமான விசாரணை என தனது கோரிக்கையை முன்வைத்திருந்தது.
தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்து அமைப்பினர் பிஜேபியினர் என அனைவர் மீது வழக்கு தொடுத்த போதும் தமிழக மக்கள் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள் என பிஜேபியுடன் கைகோர்த்துநின்றன. மதமாற்றத்தை தட்டிக்கேட்டாலே கைது என்ற அபாய சூழல் இருந்தாலும் விஹெச்பி இந்துமுன்னணி இந்துமக்கள் கட்சி என இந்து அமைப்புக்கள் பலவும் இறந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதித்தன.
அதன் பலனாக உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய பிரதிநிதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த தமிழக அரசையும் நிர்வாகத்தையும் ஆணையத்தின் அதிகாரிகள் கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு வெளிவந்த மாரிதாஸ் என்பவர் நேற்று ஒரு ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் வருடம்தோறும் எத்தனை மக்கள் மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்த ஆவணம் ஒன்றை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த ஆவணம் ஒரு குறிப்பிட்ட திருச்சபையிலிருந்து பாண்டிச்சேரியில் உள்ள தலைமையகத்திற்கு அனுப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இதனிடையே இந்து அமைப்புகள் மற்றும் பிஜேபியின் முன்னெடுத்தலே அரியலூர் மாணவியின் வழக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என அரியலூர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா