Wednesday, March 19, 2025
Home > அரசியல் > உத்திரபிரதேச தேர்தல் பரபரப்பு…! பிஜேபி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ராஜினாமா..!

உத்திரபிரதேச தேர்தல் பரபரப்பு…! பிஜேபி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ ராஜினாமா..!

11-1-22/15.13pm

உத்திரபிரதேசம் : இந்தியாவில் அடுத்தமாதம் சில மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களில் உத்திரபிரதேச மாநில தேர்தல் அரசியல் விமர்சகர்களால் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சமாஜ்வாடி அசாதுதீன் ஒவைசியின் கட்சி மாயாவதியின் பகுஜன் சமாஜ் என பல்முனைப்போட்டி நிலவுகிறது.

உத்திரபிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. உதிர்ப்பிரதேசத்தின் சமீப கால பொருளாதார வளர்ச்சி மற்றும் மாநில உட்கட்டமைப்பு ஆட்சி நிர்வாகம் என யோகியின் அரசு மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருந்தாலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் சரிநிகர் மல்லுக்கு நிற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பிஜேபியின் வெற்றியை உறுதிசெய்துவிட்டாலும் வெற்றிபெறும் தொகுதிகள் சிலவற்றில் இழுபறி ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பரபரப்பு நிலவும் நிலையில் உத்திரபிரதேச அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`

உத்திரப்பிரதேசம் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்வாமி பிரசாத். இவர் தனது ராஜினாமாவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளதோடு தனது ஆதரவாளர்களையும் ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து அவர் அடுத்தமுறை இன்னொரு சீட் வேண்டுமென்றும் தனக்கு வேறு அமைச்சகம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் தலைமை மறுத்ததால் தற்போது ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

இவருடைய ஆதரவாளரும் தில்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரோஷன் லால் வர்மா என்பவரும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் மவுரியா தனது ராஜினாமா கடிதத்தில் ” மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் நான் யோகி ஆதித்யநாத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தேன். விவசாயிகள் விவகாரம் தலித் விவகாரம் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்கள் என்னை உறுதியதால் நான் விலகுகிறேன்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

```
```

ஆனால் பல பன்னாட்டு கம்பெனிகள் தங்களது கிளைகளை உத்திரபிரதேசத்தில் தொடங்க ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு பணியாளர்களை முன்னரே தேர்ந்தெடுத்து அதற்கான பணிநியமன ஆணையையும் இதே மவுரியா தனது கைகளால் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் “மவுரியா ஜி மற்றும் அனைத்து தலைவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்” என ட்வீட் போட்டுள்ளார்.

அமைச்சர் மவுரியா தனது ஆதரவாளர்கள் சிலருடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார். உத்தரகாண்ட் கோவா மேற்குவங்கம் அதை தொடர்ந்து தற்போது உத்திரபிரதேச அமைச்சரும் கட்சியிலிருந்து திடீரென விலகியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மவுரியா மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி 2016ல் அமித்சா முன்னிலையில் பிஜேபியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா