Friday, March 29, 2024
Home > அரசியல் > உத்திரபிரதேச தேர்தல் 2022: கவர்னர் டூ எம்.எல்.ஏ..!

உத்திரபிரதேச தேர்தல் 2022: கவர்னர் டூ எம்.எல்.ஏ..!

10-02-2022/12.00pm

உத்திரபிரதேசம் : உதிர்ப்பிரதேசத்தில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. எழுகட்டங்களாக நடக்கும் சட்டமன்ற தேர்தலில் இன்று முதற்கட்டமாக மேற்கு உத்திரபிரதேசத்தில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இன்று காலை 11 மாவட்டங்களில் 11மணி வரை 20 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குமுன்னர் வீடியோ ஒன்றை வேலாயிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். “நான் மனப்பூர்வமாக ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஐந்துவருடங்களில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நான் எச்சரிக்கிறேன். இன்று நீங்கள் தவறவிட்டுவிட்டால் உத்திரபிரதேசம் கேரளாவாகவோ மேற்குவங்கமாகவோ காஷ்மீராகவோ மாறிவிடும்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும் “மிகப்பெரிய முடிவு உங்கள் கைகளில் இருக்கிறது. உங்களது வாக்கு பயமில்லாத வாழ்க்கையை உருவாக்கும். கடந்த ஐந்துவருடங்களில் பிஜேபி அர்ப்பணிப்பு உணர்வுடன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது. நீங்கள் அதை பார்த்திருக்கிறீர்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.” என கூறியுள்ளார். இந்நிலையில் முன்னாள் உத்திரகாண்ட் கவர்னரான பேபி ராணி மௌர்யா ” நான் மிக நம்பிக்கையாய் இருக்கிறேன். கடந்த தேர்தலில் ஆக்ராவில் ஒன்பது இடங்களை வென்றெடுத்தோம்.

`

இந்தமுறையும் அனைத்து இடங்களையும் வென்றெடுப்போம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவர் ஆக்ரா பகுதி சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

பிஜேபிக்கான வெற்றிவாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் அகிலேஷ் இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா