Monday, December 2, 2024
Home > அரசியல் > பரபரப்பு..! கழற்றி விடப்பட்ட மனோகர் பாரிக்கர் வாரிசு..? கைநீட்டும் எதிர்க்கட்சிகள்..!

பரபரப்பு..! கழற்றி விடப்பட்ட மனோகர் பாரிக்கர் வாரிசு..? கைநீட்டும் எதிர்க்கட்சிகள்..!

20-1-22/16.00pm

கோவா : கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் அதிலிருந்து விலகி ஏற்கனவே மம்தாவின் திரிணாமூல் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ஆம் ஆத்மீ, திரிணாமூல், காங்கிரஸ் மற்றும் ஆளும்கட்சியான பிஜேபி என நான்கு முனை போட்டிகள் நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகனான உத்பாலுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. கோவா சட்டமன்ற 34 தொகுதிக்கு வேட்பாளர்களை இன்று பிஜேபி அறிவித்துள்ளது.

மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கரின் சொந்த தொகுதியான பாஜிமில் அவரது மகனான உத்பாலுக்கு சீட்டு கொடுக்கப்படும் என அனைவரும் யூகித்திருந்த வேளையில் அந்த தொகுதி வேறு பாபுஷ் மான்சரேட்டே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்பால் குடும்பத்தினர் எந்த ஒரு கருத்தும் வெளியிடாத நிலையில் பல்வேறு யூகங்கள் செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

`

இதுகுறித்து பேசிய கோவா தேர்தல் குழு தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் ” மனோகர் பாரிக்கர் குடும்பம் எங்கள் குடும்பம். பிஜேபி குடும்பம். நடப்பு சட்டமன்ற உறுப்பினர் இருக்கும் பட்சத்தில் உத்பாலுக்கு வாய்ப்பு வழங்க முடியாது. இருந்தபோதிலும் வேறு இரு தொகுதிகளை உத்பாலிடம் கூறியிருக்கிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு உறுதியான இடத்திலேயே உத்பாலை நிறுத்த விரும்புகிறோம்.இதுகுறித்து அவரிடமும் பேசியிருக்கிறோம்” என குறிப்பிட்டார். இந்த சம்பவம் நடந்த அடுத்த அரைமணிநேரத்தில் இலவச முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் ” மனோகர் பாரிக்கரின் தியாகங்களை கடின உழைப்பை நாங்கள் மதிக்கிறோம். பாஜிம் தொகுதியிலேயே உத்பாலுக்கு சீட்டு வழங்க தயாராய் இருக்கிறோம். அவரை எங்கள் கட்சிக்கு அழைக்கிறோம்” என டிவீட்டடித்துள்ளார்.

```
```

உத்பாலின் முடிவு பற்றிய எந்த ஒரு கருத்தும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால் கோவா அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

…..உங்கள் பீமா