Saturday, January 25, 2025
Home > அரசியல் > எங்க அப்பா அப்படி சொல்லவேயில்லை..! கதறும் துரை வைகோ..!

எங்க அப்பா அப்படி சொல்லவேயில்லை..! கதறும் துரை வைகோ..!

17-11-21/ 6.21am

சென்னை : எங்கள் தலைவர் அப்படி சொல்லவேயில்லை. வேண்டுமென்றே யாரோ வதந்தியை பரப்புகிறார்கள் என துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கடந்த சிலநாட்களாக சமுகவலைத்தளத்தில் நிறுவனர் வைகோ பற்றிய மீம் ஒன்று உலவி வருகிறது. அதில் “நான் அரசியலிலிருந்து விலகுகிறேன். மதிமுக கட்சியை தாய்கழகமான திமுகவுடன் இணைக்கப்போகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தியை புதியதலைமுறை வெளியிட்டதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இது இணையத்தில் வைரலாகி மதிமுக தலைவர் வைகோவுக்கு போன்கள் பறந்தன. மேலும் பலர் நேரடியாக தொடர்புகொண்டு என்ன கட்சியை கலைக்கப்பபோகிறீர்களாமே என கேட்டிருக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைகோ கடந்த சில தினங்களாக அறிக்கை எதுவும் வெளியிடாமல் அமைதி காத்தார். இது மதிமுகவினரிடையே அச்சத்தை உண்டுபண்ணியது.

`

மதிமுக கலைக்கப்பட்டு விடுமோ என சந்தேக கேள்விகளை தலைமையிடம் கேட்க தொடங்கினர். இதையடுத்து மதிமுக வைகோவின் மகனான துரை வைகோ இதுகுறித்த சந்தேகங்களை போக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” வதந்திகளை நம்பவேண்டாம். புதிய தலைமுறை அப்படி ஒரு செய்தியை வெளியிடவில்லை.

```
```

போலியாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் அந்த செய்திக்கும் புதிய தலைமுறை நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த செய்தியும் பொய்யானது. தலைவர் மீதும் கழகத்தின் மீதும் வன்மம்” என தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா