10-2-22/10.30am
டெல்லி : சமீபத்தில் பாரத பிரதமர் மோடி இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் சமூகவலைத்தள கணக்குகள் முடக்கப்பட்டு ஹேக் செய்யப்பட்டு பலத்த சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் சமூகவலைத்தள பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பது பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தின் ஒரு படைப்பிரிவான சினார் கார்ப்ஸ் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரிவிற்கு சமூகவலைத்தளத்தில் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன. காஷ்மீர் பகுதி மக்கள் தங்கள் அவசர பாதுகாப்பு உதவிக்கு இந்த சமூகவலைத்தள கணக்கை பயன்படுத்துவது வழக்கம்.
சினார் கார்ப்ஸின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை எந்த ஒரு காரணமுமின்றி மீட்டா அமைப்பு முடக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி ராணுவ உயரதிகாரி ” தொடர்புடைய முகநூல் அமைப்பு உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால் இன்றுவரை எந்த ஒரு பதிலறிக்கையோ விளக்கமோ கொடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.

முகநூல் மற்றும் ட்விட்டர் ஆகியவை தங்களுக்கென ஒரு தனி அரசாங்கத்தை நடத்துவதாகவும் உலகநாடுகளின் பாதுகாப்பு இறையாண்மை குறித்து எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தின் கணக்குகள் கடந்த பிப்ரவரி 8 அன்று முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா