Thursday, March 28, 2024
Home > செய்திகள் > ஆர்.பி.ஐ ரெப்போ வட்டி விகிதம்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ஆர்.பி.ஐ ரெப்போ வட்டி விகிதம்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

10-2-22/12.50pm

இந்திய ரிசர்வ் வங்கி இந்த காலாண்டிற்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தொடர்ந்து 4% வட்டி முறை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டின் வளர்ச்சி பாதையில் எந்த தொய்வின்றி முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. குறிப்பாக தொழில் முனைவோர் குறைந்த வட்டியில் கடன் பெற உதவியாக இருக்கும் என்றும் கடன் வாங்கியவர்கள் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் பயன் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம். இதை பொறுத்தே எஸ்.பி.ஐ, எச்.டி.எப்.சி போன்ற பொதுத்துறை வங்கிகள் தங்கள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும். இவர்கள் வாங்கும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

`

கடந்த மார்ச் 2020 முதல் இந்த வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதால் பொது மக்களுக்கு, தொழில் முனைவோரும் எந்த பாதிப்பும் இல்லாமல் தொடந்து முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக புதிய வீட்டுக்கு 6.7% என்ற குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. அதே போல் புதிய தொழில் தொடங்க 9% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

```
```

அதே போல் நாட்டின் பணவீக்கம் உணவு தானியங்கள் காய்கறிகள் போன்ற அத்யாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து மக்கள் மீது எந்த சுமையும் வைக்காமல் இருப்பதால் மக்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.

சௌந்தர ராஜன்/ நங்கநல்லூர்