4-3-22/12.47PM
சென்னை : தமிழகத்தில் நடைபெற்ற நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதிக இடத்தை பெற்றுள்ளன. கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட மதிப்பான இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் ராகுலின் தமிழக வருகைக்கு பிறகு காங்கிரசுக்கு மேயர் பதவிகளை விட்டுக்கொடுத்திருக்கிறது திமுக தலைமை.
திமுகவின் கோட்டையான பல இடங்களில் தோழமைகட்சிகளுக்கு மேயர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தலைவர் பதவியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்ததினால் அப்பகுதி திமுக நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். பலர் கட்சி மூத்தநிர்வாகிகள் காதுபடவே ராஜினாமா செய்யப்போவதாக முணுமுணுக்கின்றனர்.

கும்பகோணம் பகுதியில் உள்ள 48 வார்டுகளில் 43 திமுகவும் மூன்று அதிமுகவும் மற்றவை மூன்றும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால் மேயர் பதவி காங்கிரஸுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் நேற்று இரவு கும்பகோணம் திமுக தலைமையலுவலகத்தில் கூடிய வெற்றி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். நள்ளிரவு வரை நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒருமுடிவும் எட்டப்படவில்லை.
அதனால் சில ராஜினாமா செய்யலாம் என பேச்சு அடிபடுகிறது. மேலும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்களம்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் காங்கிரசும் திமுகவும் நேரடியாக 14 ஆவது வார்டில் போட்டியிட்டது. இதில் திமுக வேட்பாளர் கண்ணன் தோல்வியடைந்தார். காங்கிரசை சேர்ந்த வேல்முருகன் வெற்றிபெற்றுள்ளார். வந்த பகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக பெண் வேட்பாளரை மேயராக்க திமுகவினர் முயன்றுவருகின்றனர்.
ஆனால் திமுக தலைமை காங்கிரசுக்கு மேயர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளது. ஆனாலும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆதரவாளர்கள் தமது வெற்றிவேட்பாளர்களையும் சில சுயேச்சை களையும் ஏற்காடு பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அடைத்து வைத்துள்ளனர். இருந்தபோதிலும் தலைமையின் சொல்லை மீறி திமுக பெண் வேட்பாளரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நிறுத்தியுள்ளனர் உள்ளூர் திமுகவினர்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் கடலூர் பகுதி திமுக வேட்பாளர்களை வானூர் அருகே உள்ள உல்லாச விடுதியில் மாவட்ட நிர்வாகம் அடைத்துவைத்துள்ளது. இங்கேயும் காங்கிரஸ் அல்லது வேறுயாருக்கும் தலைவர் பதவி கொடுத்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் செயல்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கட்சிக்காக அரும்பாடுபட்ட தொண்டர்களின் கருத்தை கேட்காமல் காங்கிரஸ் விசிக போன்ற கட்சி வேட்பாளர்களை மேயராக்க நினைப்பது எங்களை காயப்படுத்தியுள்ளது என திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகமெங்கும் பரவலாக இதே நிலை காணப்படுவதாக கட்சியின் உள்ளூர் பிரமுகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா