Tuesday, May 5, 2026
Home > அரசியல் > தடைக்கல்லா பாஜக..? கண்ணாடி முன் நின்று பாருங்கள்..பளிச் அண்ணாமலை

தடைக்கல்லா பாஜக..? கண்ணாடி முன் நின்று பாருங்கள்..பளிச் அண்ணாமலை

3-1-22/19.20pm

மதுரை : திமுக அமைச்சர் சேகர்பாபு கண்ணாடி முன் நின்று தன்னை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை அதிரடியாக பதிலளித்துள்ளார்.

நேற்று தமிழக திமுக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியின் தமிழக வருகை பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த சேகர் பாபு ” உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல்கொடுப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவளிப்பார்.

மக்களை பாதிக்கும் திட்டம் என்றால் எதிர்ப்பார். தமிழகத்தில் நடக்கும் நலத்திட்ட பணிகளுக்கு பாஜக தலைவர் தடைக்கல்லாக இல்லாமல் படிக்கல்லாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டார். இதற்க்கு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்தார்.

நேற்று மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி மதுரை சென்றிருந்த அண்ணாமலை பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் பாஜகவை அசைத்து கூட பார்க்க முடியாது.

எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை பயமுறுத்தியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கூறி வருகிறது. இதிலேயே தெரிகிறது யார் தடைக்கல்லாக இருப்பார் யார் படிக்கல்லாக இருப்பர் என. மக்களுக்கு நன்கு தெரியும் பிஜேபி மக்கள் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுகிறது என்று ” என தெரிவித்தார்.

மேலும் எந்த ஒரு கருத்தையும் கூறும் முன்பாக அமைச்சர் சேகர் பாபு ஒருமுறை கண்ணாடி முன் நின்று தன்னை பரிசோதித்துக் கொள்ளவேண்டும் என சேகர்பாபு குறித்த கேள்விக்கு பளிச்சென பதிலளித்தார். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்த்த எல்லா திட்டங்களையும் தற்போது செயல்படுத்த நினைக்கிறது இது என்ன மாதிரியான அரசியல் என பிஜேபியினர் கேள்வியெழுப்புகின்றனர்.

…..உங்கள் பீமா