Sunday, June 28, 2026
Home > செய்திகள் > காவல்துறை அதிரடி..! பிஜேபி கவுன்சிலர் உமா ஆனந்தனுக்கு வாக்கு சேகரித்தவர் கைது..!

காவல்துறை அதிரடி..! பிஜேபி கவுன்சிலர் உமா ஆனந்தனுக்கு வாக்கு சேகரித்தவர் கைது..!

1-3-22/10.16am

சென்னை : சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் பிஜேபி வேட்பாளர் உமா ஆனந்தன் என்பவர் போட்டியிட்டார். 22ம் தேதி வாக்கு எண்ணப்படும் முன்னரே உமா ஆனந்தன் எட்டு வாக்குகள் பெற்று படுதோல்வியடைந்ததாக தமிழக தொலைக்காட்சிகள் செய்தி ஒளிபரப்பின.

ஆனால் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் உமா ஆனந்தன் வெற்றிபெற்றார். இந்நிலையில் பல பிரபலங்கள் மாம்பலம் பகுதியில் அவருக்காக வாக்கு சேகரிக்க மக்களை சந்தித்திருந்தனர். மேலும் பல தன்னார்வலர்களும் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஈஸ்வர் சந்திரன் சுப்பிரமணியன். இவரை யூ ட்யூப் சேனலில் பேட்டியெடுத்தனர்.

அதில் பேசிய ஈஸ்வரன் “தலித்திஸ்தான் கேட்ட அம்பேத்காரையும் பிரிவினை பேசிய ஈ.வே.ராமசாமியையும் கோட்ஸே கொன்றிருக்க வேண்டும். முகம்மது அலி ஜின்னாவை கொண்டிருக்க வேண்டும். ஒரு பசுவை கொன்றிருக்க கூடாது. சனாதன தர்மத்தை பின்தொடர்பவன் தீவிரவாதி என்றால் நானும் ஹிந்து தீவிரவாதிதான்” என கூறினார்.இதையடுத்து கொந்தளித்த காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழக தலைவர் கண்ணதாசன் சைபர் க்ரைமில் புகாரளித்தார்.

இந்த புகாருக்கு அதிரடி காட்டிய போலீசார் 153,(கலகம் தூண்டுதல்) 153ஏ ( மத இந்த ரீதியாக விரோதத்தை தூண்டுதல்) 505(1)பி (மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்தல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஈஸ்வரனை போலீசார் கைதுசெய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு திராவிட கழகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு மாற்று மதத்தினர் கூடிய கூட்டத்தில் மோடி அமித்ஷாவை செஞ்சுவிடுங்க என கூறிய நெல்லைக்கண்ணன் போன்றோர் மீது மாண்புமிகு வீரமிகு காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா