1-3-22/12.21pm
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நேற்று புதிதாக பாலியல் புகார் வழக்கும் பதியப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக பிரபலங்கள் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அதிமுக அமைச்சர்களும் தண்டிக்கப்படுவார்கள் என கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கைதை எதிர்த்து அதிமுகவினர் சென்னை மதுரை உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பிஜேபியினரும் கலந்து கொண்டுள்ளனர். கூட்டணி தர்மத்திற்காக என கூறப்பட்டாலும் பல பிஜேபியினர் மற்றும் ஹிந்து அமைப்பினர் மீது வழக்கு போட்டது அதிமுக என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டாஸ் போட்டதும் கறுப்பர் கூட்டம் என்கிற பெயரில் இந்துமத நம்பிக்கைகளை ஆபாசமாக பேசிய நபர்களை வெளியே விட்டதும் அதிமுக ஆட்சியில் என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்து மத பண்டிகையான விஜயதசமியை ஒட்டி இரவோடு இரவாக பிஜேபி பிரமுகர் கல்யாணராமனை கைது செய்து குண்டாசில் அடைத்தது.

இதற்க்கு அதிமுக தரப்பில் எந்த ஒரு கண்டன அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் பிஜேபி தொண்டர்கள் கல்யாணராமன் அவர்களின் கைதுக்கு போராடாத நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
https://m.facebook.com/story.php?story_fbid=127713496460838&id=100076665633178
மேலும் பிஜேபி தனித்து போட்டியிடுவது குறித்து ஜெயக்குமார் அளித்த பேட்டியில் தாமரை கனவில் கூட மலராது என குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா