2021 செப்டம்பர் 3 அன்று தூத்துக்குடி மறைமாவட்டம் தாளமுத்து நகர் பங்குக்கு உட்பட்ட புனித ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா தருவைக்குளம் பங்குத்தந்தை வின்சென்ட் கொடியேற்றி வைக்க கோலாகலமாக திருவிழா தொடங்கியது.
இந்நிகழ்ச்சிக்கு தாளமுத்து நகர் பங்குத்தந்தை நெல்சன் தலைமை தாங்கினார். அருட்சகோதரிகள் உட்பட பிபின் (துணை பங்குத்தந்தை) அருட்தந்தை ஜார்ஜ் ஆலிபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருவிழா நாட்களில் மறையுரையும் மாலியில் ஆராதனையும் நடைபெறுகிறது.
செப்டம்பர் 11 ல் மாலை 6.30 மணியளவில் நடக்க இருக்கும் சிறப்பு ஆராதனையில் பல முக்கிய அருத்தந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதையறிந்த இந்து முன்னணி அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
“இந்து மத திருவிழாவான விநாயக சதுர்த்தியை கொரோனா தொற்றை காரணம் காட்டி நிறுத்திய திமுக அரசு இந்த பண்டிகையை தடை அனுமதித்தது எப்படி. இப்போது கொரோனா பரவாதா. இந்துவிரோத போக்கிலேயே திமுக அரசு செயல்படுகிறது.” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய தூத்துக்குடி மக்கள் “எங்களை திருச்செந்தூர் சென்று வழிபட தடுத்து நிறுத்திய திமுக அரசு கிறித்தவ கூட்டத்தை அனுமதித்திருப்பது அரசின் இந்து விரோத போக்கையே காட்டுகிறது” என தெரிவித்தனர்.