Saturday, July 27, 2024
Home > செய்திகள் > அமெரிக்காவில் குழந்தை திருமணம் அதிகரிப்பு..!! டிஸ்மேண்டில் இந்துத்வா என இந்தியாவின் பின்னால் சுற்றும் அமெரிக்க பல்கலை கழகங்கள்..!!

அமெரிக்காவில் குழந்தை திருமணம் அதிகரிப்பு..!! டிஸ்மேண்டில் இந்துத்வா என இந்தியாவின் பின்னால் சுற்றும் அமெரிக்க பல்கலை கழகங்கள்..!!

உலகநாடுகளின் சட்டாம்பிள்ளையாக தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் கோழைத்தனம் ஆப்கான் விவகாரத்தில் வெளிவந்தது. தனது குடிமக்களை புறக்கணித்துவிட்டு ராணுவம் உயிருக்கு பயந்து ஓடியது. விலையுயர்ந்த நவீனமான ஆயுதங்களையெல்லாம் தாலிபனுக்கு தாரைவார்த்து விட்டு தலைதெறிக்க ஓடியது.

இறந்த அமெரிக்க வீரர்களின் உடலை வாங்க கூட தாலிபான்களிடம் பேரம் பேசியது உலகறிந்த விஷயம்.மேலும் 5000த்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தாலிபான்கள் பிடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் DISMANDLE HINDUTHVA என்ற ப்ராஜெக்டை கையிலெடுத்து சனாதன தர்மத்தின் மேல் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். ஆனால் பாவம் அவர்கள் காலுக்கு கீழ் உள்ள அசிங்கங்கள் அவர்கள் கண்ணில் படவில்லை.

அமெரிக்கா எவ்வளவு சொகுசான நவீன நாடோ அதே அளவுக்கு பழமைவாதிகள் மிகுந்த நாடு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. கொலை, கொள்ளை, மாபியா, போதை மருந்து கடத்தல் என சமூகவிரோத குற்றங்கள் நிறைந்த நாடு அமெரிக்கா.

`

மேலும் குழந்தை திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் ஒரே நாடு அமெரிக்கா என்பது வியப்பளிக்க கூடிய விஷயம்.அமெரிக்காவின் பத்து மாநிலங்களில் 17 வயது திருமண வயதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேரி லேண்ட் ஹவாய் மாநிலங்களில் 15 வயது திருமணவயதாகும். நோர்த் கரோலினா அலாஸ்கா மாநிலங்களில் 14 வயதே திருமண வயது. இப்படி குழந்தை திருமணத்தை பலமாக ஆதரிக்கிறது அமெரிக்கா.

```
```

கடந்த 2000 ஆண்டு முதல் நியூயார்க்கில் 6800 குழந்தை திருமணமும், விர்ஜினியாவில் 6000த்திற்கும் மேற்பட்ட குழந்தை திருமணமும் அலபாமாவில் 11,600 திருமணங்களும் நடந்திருப்பதாக சவுத் கரோலினா ரெப்ரசென்டேடிவ் பிராட் ஹூட் குறிப்பிட்டார்.

கடந்த 2000 ஆண்டு முதல் 3,00,000திற்கும் மேலான குழந்தை திருமணங்கள் அமெரிக்காவில் நடைபெற்றிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முதலில் உங்கள் அசிங்கங்களை சுத்தப்படுத்துங்கள் எங்கள் எல்லையில் நுழையாதீர்கள் என நெட்டிசன்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களை கழுவி ஊற்றி வருகின்றனர்.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjrqIXYh-zyAhWO8HMBHcWNBR4QFnoECBMQAw&url=https%3A%2F%2Fwww.newsnationnow.com%2Fus-news%2Fchild-marriage-is-currently-legal-in-46-states%2F%23%3A~%3Atext%3DMinnesota%252C%2520Pennsylvania%252C%2520New%2520Jersey%252C%2CHawaii%2520and%2520Kansas%252C%2520it%27s%252015.&usg=AOvVaw3L2n93SgCM5UqgbQq4iHrz

…உங்கள் பீமா