Wednesday, May 25, 2022
Home > செய்திகள் > கோர்ட்டை விட்டு ஓடிய ப.சிதம்பரம்..! விரட்டியடித்த காங்கிரஸ்..! வெளியான வீடியோ

கோர்ட்டை விட்டு ஓடிய ப.சிதம்பரம்..! விரட்டியடித்த காங்கிரஸ்..! வெளியான வீடியோ

5-5-22/9.17AM

மேற்குவங்கம் : காங்கிரஸ் கட்சியில் எப்போதுமே உட்பூசல் வாழையடி வாழையாக தொடர்ந்து வருகிறது. லால் பகதூர் சாஸ்திரி அவர்களிடமிருந்து தொடங்கப்பட்ட அந்த பாரம்பரியம் தற்காலம்வரை தொன்றுதொட்டு தொடர்ந்து வருகிறது.

காங்கிரஸ் எனும் பாரம்பரிய தேசிய கட்சி தள்ளாடி வருவதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது புல்லுருவிகளே. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜாமீன் புகழ் ப,சிதம்பரத்தை சொந்த கட்சியினரே கோர்ட்டை விட்டு ஓட விட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக காங்கிரஸ் திமுகவுடன் இணைந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களை கையிலெடுத்தது. ஆனால் அந்த வழக்கில் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக களமிறங்கியது காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் துணைவி நளினி சிதம்பரம் என்பது ஊரறிந்த விஷயம்.

இதனிடையே மேற்குவங்க மாநில அரசுக்கு சொந்தமான மெட்ரோ டைரி நிறுவனத்தின் 47 சதவிகித பங்குகளை கெவெண்டர் அக்ரோ லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு மாநில மமதா அரசு வாரி வழங்கியிருந்தது. இந்த பங்குகள் விற்பனையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மேற்குவங்க காங்கிரஸ் மாநில தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நிறுவனத்திற்கு ஆதரவாக நேற்று கொல்கொத்தா உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார். இதனால் கொதித்துப்போன காங்கிரஸ் தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சங்கம் சிதம்பரத்தை எதிர்த்து கோஷமிட ஆரம்பித்தனர்.

இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கவுஸ்தாவ் பாக்சி ” கேபினெட் ஒப்புதலுடன் மக்களின் கோடிக்கணக்கான பணம் திருடப்பட்டுள்ளது. சொந்த கட்சியினருக்கு எதிராக செயல்படும் சிதம்பரம் ஒரு புல்லுருவி. திரிணாமூல் தொண்டர்களால் தினமும் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இவரை போன்ற ஆட்களால் மாநிலத்தில் காலூன்ற முடியாமல் நிற்கிறோம். அவர் வழக்கில் இருந்து விலக வேண்டும்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் சிதம்பரம் மாநில மமதா அரசை காப்பாற்ற சொந்த கட்சியினரையே முதுகில் குத்துகிறார் என தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே முன்னாள் அமைச்சர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

…..உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்





This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram