Friday, March 29, 2024
Home > செய்திகள் > கரும்பு விவசாயிகள் கதறல்..! வாக்குறுதியை வானில் பறக்க விட்ட திமுக..!

கரும்பு விவசாயிகள் கதறல்..! வாக்குறுதியை வானில் பறக்க விட்ட திமுக..!

“திமுக கொடுத்த வாக்குறுதிகளை என்றுமே நிறைவேற்றியதில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தரப்பில் வாக்குறுதிகளாக பலவற்றை அள்ளி வீசியது. நகை கடன் தள்ளுபடி செய்யப்பளிக்கிறோம் அதனால் நீங்கள் நகைகளை தாராளமாக அடகு வையுங்கள். நாங்கள் மீட்டு தருகிறோம் என உதயநிதி ஒரு பரப்புரை கூட்டத்தில் பேசினார். ஆனால் செய்யவில்லை.” என எதிர் தரப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.

அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலில் விவசாயிகளுக்கு வாக்குறுதியாக கரும்பின் ஆதாரவிலை ஒரு டன்னுக்கு 4000 ரூபாய் தருகிறோம் என வாக்குறுதி அளித்தது. ஆனால் நேற்று கரும்பு விவசாயிகளுக்கு ஆதாரவிலையை நிர்ணயிக்காமல் டன்னுக்கு 42.50 பைசா ஊக்கத்தொகை என அறிவித்திருக்கிறது.

இது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போது குறைந்தபட்ச ஆதார விலையாக டன்னுக்கு 2850 ரூபாய் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதிலும் திமுக தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு பகுதி கரும்பு விவசாயிகள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

`

தமிழகத்தில் கடலூர் கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை பகுதிகளில் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது. 2014-2015 ல் 7 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி நிலப்பரப்பு தற்போது மூன்று லட்சம் ஏக்கருக்கு குறைவாகிவிட்டதாக கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவிக்கிறது.

மேலும் எத்தனால் பயன்பாட்டை அதிகரித்தால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும். அதற்க்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தனர். குறைந்த பட்ச ஆதார விலையாக 2850 ஆக நிர்ணயித்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

```
```

திமுக கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விவசாயிகளின் வயிற்றில் அடித்துவிட்டது என விவசாயிகள் புலம்பிவருகின்றனர்.

……உங்கள் பீமா

#sugarcanefarmers #tamilnadu #dmk #mkstalin