மஹாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும் சிவசேனா தலைவருமான அனில் தேஷ்முக் தற்போது தலைமறைவாக உள்ளார். ரிலையன்ஸ் அம்பானி வீட்டருகே வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீஸ் விசாரணையை ஆரம்பித்த பொது இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே மும்பை கமிஷனர் பரம்பீர் ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள பெரிய தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கான்டராக்டர் ஒருவர் கொல்லப்பட்டதும், அம்பானி வீட்டருகே நின்ற வெடிகுண்டு நிரப்பிய காரின் உரிமையாளர் கொலை வழக்கிலும் இருவரும் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த வழக்கின் தீவிர விசாரணையில் சிவசேனா தலைவரும் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக்கிற்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததில் பங்கு உண்டு என தெரிய வந்தது. அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது.
அவரை கைது செய்ய சிபிஐ நெருங்கியபோது தலைமறைவாகிவிட்டார். அடுத்து தனது வழக்கறிஞர் மூலம் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனால் மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.
அவரை சிபிஐ வலைவீசி தேடிவந்த நிலையில் வழக்கு சமந்தமான அனைத்து தகவல்களும் கசிந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அதற்க்கு காரணமான அணில் தேஷ்முக்கின் வழக்கறிஞர் ஆனந்த் தாஹா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் திவாரி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. இதை தொடர்ந்து இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
…உங்கள் பீமா
pic credit : livelaw