Friday, February 23, 2024
Home > செய்திகள் > கோயம்புத்தூரில் பயங்கரம்..! பேருந்தை மோதிய லாரி..! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!

கோயம்புத்தூரில் பயங்கரம்..! பேருந்தை மோதிய லாரி..! நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..!

27-12-21/13.29pm

கோயம்புத்தூர் : தமிழகத்தில் சமீப காலமாக விபத்துக்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.கடந்த 2020ல் மட்டுமே சாலைவிபத்துக்கள் 7287 நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2015 முதல் 2020 வரை ரத்து செய்யப்பட ஓட்டுநர் உரிமங்கள் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 3.35 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல இறப்பு விகிதமும் சீராக குறைந்துவருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும் ஆங்காங்கே விபத்துக்கள் நிகழ்ந்து மனித உயிர்கள் பலியாகிக்கொண்டே இருக்கிறது.

2019 ல் மட்டும் 57228 சாலைவிபத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் உயிரிழப்புகள் 12.611 என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய மாநில அரசுகள் விபத்துக்களை தடுக்க பல வகைகளில் முயன்றாலும் ஓட்டுனர்கள் அதை பொருட்படுத்துவதில்லை என போக்குவரத்து வட்டார அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

`

2.06 PM பயணிகள் சிலர் கவலைக்கிடம். பலர் படுகாயம் என தகவல்

நேற்று மாலை தூத்துக்குடி அருகே ஒரு விபத்து நடந்து 22 பெண்கள் காயப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு விபத்து நடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை கிராமத்தின் அருகே அரசுப்பேருந்து ஒன்று பயணிகளுடன் மெதுவாக சென்று கொண்டிருந்தது. குறுக்கு வாக்கில் திடீரென வந்த லாரி ஒன்று அந்த பேருந்தில் மோதியது.

```
```

இதனால் நிலைதடுமாறிய பேருந்து சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அச்சத்தில் அலறினர். சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து பேருந்து அருகே சென்றனர். மீட்புப்பணியில் அங்கிருந்தவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பயணிகளுக்கும் சிறு காயங்களே ஏற்பட்டிருப்பதாக முதல் தகவல் வெளியாகியிருக்கிறது.

….உங்கள் பீமா