Saturday, September 26, 2026
Home > செய்திகள் > திண்டுக்கல்லில் பரபரப்பு..! திமுக கொடிகட்டிய சொகுசு கார் ஏற்றி ஒருவர் படுகொலை..!?

திண்டுக்கல்லில் பரபரப்பு..! திமுக கொடிகட்டிய சொகுசு கார் ஏற்றி ஒருவர் படுகொலை..!?

8-12-21/ 12.32pm

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே திமுக கோடி கட்டிய சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றவரை அடித்து தூக்கிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை கிராமம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் இன்று காலை திண்டுக்கல் மதுரை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது படுவேகமாக வந்த ஸ்கார்பியோ சொகுசு கார் ஒன்று சிதம்பரத்தை இடித்து தூக்கி வீசியது. அதனால் சிதம்பரம் வாகனத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை காப்பாற்ற மனமில்லாமல் அந்த சொகுசு காரை ஒட்டிய பிரமுகர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த சிதம்பரத்தை சிறிது நேரம் கழித்து கண்ட அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தப்போக்கினால் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என கூறியதாக தெரிகிறது.

இந்த படுகொலையை நிகழ்த்திவிட்டு நிற்காமல் மனிதாபிமானமில்லாமல் சென்ற காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் மரணத்தை வழக்காக பதிவு செய்த அம்பாத்துறை காவல்துறையினர் தப்பியோடிய பிரமுகர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படுவேகமாக வந்து மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் இது கொலையா இல்லை விபத்தா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டிருந்தால் வழக்கை திசை திருப்பாமல் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி தரவேண்டும் என அம்பாத்துறை மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : நியூஸ் J

…..உங்கள் பீமா