27-12-21/12.22PM
தேனி : ஜெய்பீம் போலி கதை புகழ் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் படத்தின் ஷுட்டிங்கில் ஒரு துணை நடிகை கற்பழிக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது.
பாண்டிச்சேரி பூமியான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மஹாலிங்கம். இவரது மனைவி பத்மப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துணை நடிகையாவார். டைரக்டர் சங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக நடிக்க ஜெய்பீம் புகழ் சூர்யாவின் தம்பி கார்த்தி கதாநாயகனாக நடிக்க முத்தையா என்பவர் இயங்கிக்கொண்டிருக்கும் திரைப்படமான விருமன் பட ஷூட்டிங் தேனியில் நடைபெற்றுவருகிறது.
கடந்த 16 டிசம்பர் அன்று தேனியில் நடந்த இந்த சூட்டிங்கில் பத்ம ப்ரியாவும் கலந்துகொண்டுள்ளார் என கூறப்படுகிறது. அங்கு உள்ள பிரபலமான நட்சத்திர விடுதியான ABM விடுதியில் படக்குழுவினர் மொத்தமாக அறையெடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது படக்குழுவை சேர்ந்த சிலர் பத்மப்ரியாவின் அறைக்கு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த கொடுமை நடந்த மறுநாளே மீண்டும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். அதற்க்கு ஒத்துழைக்காத பத்மா எனக்கு வலிக்கிறது விட்டுவிடுங்கள் என கெஞ்ச அந்த மர்ம மனிதர்கள் வக்கிரமாக சீண்டியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து வெளியில் ஓடிவந்த அந்த பெண் கம்பம் தேனி நெடுஞ்சாலையில் நடந்துவந்துள்ளார்.
அங்கே வந்த ஒரு பேருந்தை பிடித்து உத்தமபாளையம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. அங்கிருந்த ஆய்வாளர் மங்கையர் திலகம் தேனி கட்டுப்பட்டு அறைக்கு தகவல் சொல்லி உத்தமபாளையத்திருந்து தேனிக்கு மீண்டும் பத்மாவை அனுப்பியுள்ளார்.அங்கு பிசி பட்டி ஆய்வாளர் மதன கலா விசாரித்ததாகவும் பல லட்சங்கள் கைமாறியதாகவும் அதன்பின்னர் துணை நடிகை காணாமல்போய் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக எழுதிவாங்கிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு பத்மாவை அனுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மைக்கதை என்கிற பெயரில் திரித்து கதை சொல்லும் ஜெய்பீம் தனது தம்பியை இந்த விவகாரத்தில் காப்பாற்றுவாரா அல்லது பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பாரா எனவும் அதிமுக ஆட்சியில் தினம்தோறும் பொங்கி சமூக கருத்துக்களை கூறிவந்த ஜோதிகா தனது மைத்துனர் விவகாரத்தில் அமைதி காப்பாரா இல்லை ஆக்சனில் இறங்குவாரா எனவும் தேனி மக்கள் விமர்சித்து வருகின்றனர்.
…உங்கள் பீமா