27-12-21/14.44pm
சென்னை : சமூக ஊடகங்களில் உண்மைகள் எவ்வளவு வெளிவருகிறதோ அதே அளவிற்கு திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளும் பரவுகின்றன. எங்கோ நடந்த வீடியோக்களை பகிர்ந்து தமிழகத்தில் நடந்தது போல சித்தரித்து வெளியிடப்படும் வீடியோக்கள் ஏராளம். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குன்னூரில் நடந்த கோரமான விபத்தை குறித்த பொய்யான வீடியோ ஒன்று வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல பாரத பிரதமர் மோடி 2014 தேர்தலின் போது ” ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் கொடுக்குமளவிற்கு கறுப்புப்பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்ருக்கிறது” என குறிப்பிட்டிருந்தார். அதை எப்படி திரித்து தமிழக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தார்கள் என்பதை அனைவரும் அறிவர். அதே போல தற்போது இரண்டு நாட்களாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ஒரு இளைஞர் அரசுப்பேருந்து ஓட்டுனரை தாக்குவதைப்போலவும் அந்த ஓட்டுநர் வாயில் ரத்தம் வருவது போலவும் அந்த காணொளி அமைந்திருந்தது. அதில் வரும் இளைஞர் சென்னை பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்தவர் என இணையத்தில் வீடியோவோடு அதிகமாக பகிரப்பட்டது. இதுகுறித்து தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
“கேரளா மாநிலம் மனகாட்டில், 2018-ஆம் ஆண்டு பேருந்து ஓட்டுனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றது போன்று சித்தரித்து பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற தவறான செய்தியை வேண்டும் என்று பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளது.
…..உங்கள் பீமா