02-01-22/13.11pm
சேலம் : பாரத பிரதமர் மோடி காணொளி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு களஞ்சியம் அமைப்பை சேர்ந்த திருமதி சாந்தி என்பவருடன் உரையாற்றினார்.


பாரத பிரதமர் மோடி தன்னார்வலர்கள் மற்றும் சமூக தொண்டாற்றுபவர்கள் சுயதொழில் புரிவோர் என அனைத்து மக்களிடம் நேரிடையாக காணொளி வாயிலாக பேசிவருகிறார். இந்நிலையில் சேலம் கிழக்கு மாவட்டம் வீரபாண்டி தெற்கு ஒன்றியத்தில் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியான திருமதி சாந்தி என்பவருடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மோடி காணொளி வாயிலாக பேசினார்.
இந்த பெண்கள் சுய உதவி அமைப்பு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து அவரை கடலை எள் போன்ற தானியங்களை வாங்கி நறுமுகை எனும் பெயரில் சுத்தமான எண்ணெயாக மாற்றி விற்பனை செய்துவருகின்றனர். இதற்க்கு மத்திய அரசின் பல திட்டங்கள் மூலம் பல சலுகைகள் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசின் வங்கிகளில் நிதி உதவி பெறுவதாகவும் விற்பனைக்கென தனியாக வாகன வசதியும் மத்திய அரசின் நபார்டு வங்கி வழங்கியிருப்பதாகவும் சாந்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிஜேபி சேலம் மாவட்ட பொது செயலாளர் எம்.கே.குமார், மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் ஓ.பி.சி அணி மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
…..உங்கள் பீமா
