4-3-22/15.10pm
ஆந்திரா : உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையே நடக்கும் போரில் பல அப்பாவி மக்கள் சிக்கித்தவிக்கின்றனர். பல நாடுகள் தங்களது மக்களை காப்பாற்ற மறுத்துவிட்ட நிலையில் இந்தியா தனது மக்களை பத்திரமாக மீட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் ராசியா பேகம். இவரது மகன் நிசாமுதீன் அமன். இவர் கடந்த 2020 கொரோனா தொற்று ஊரடங்கு நேரத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்க ராசியா பேகம் தனி ஒரு ஆளாக தெலுங்கானாவில் இருந்து 1400 கிலோமீட்டர் இருசக்கரவாகனத்தில் பயணித்து மகனை மீட்டார்.

தற்போது அவரது மகன் நிஜாமுதீன் ரஸ்யா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சுமி எனும் ஊரில் மருத்துவம் பயின்று வருகிறார். தற்போது அவர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அங்கே சிக்கித்தவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது மகன் பங்கருக்குள் பதுங்கியிருப்பதாகவும் அங்கிருந்து தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த போது அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் தலையிட்டு தனது மகனை காப்பற்றி தருமாறு கோரிக்கையெழுப்பியுள்ளார். மேலும் மாநில உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தனது மகனை மீட்டுத்தரவேண்டும் என்றும் மனு ஒன்றை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
….உங்கள் பீமா
