Tuesday, October 15, 2024
Home > செய்திகள் > உங்கள் பெயர் நீரஜா..!! இதோ 501 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்..!!

உங்கள் பெயர் நீரஜா..!! இதோ 501 ரூபாய்க்கான பெட்ரோல் இலவசம்..!!

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இந்த வருடம் மட்டுமே ஏழு மெடல்களை வென்றிருக்கிறது. ஏழு வெற்றி வீரர்களில் நீரஜ் சோப்ரா மட்டுமே தங்கப்பதக்கத்தை அள்ளினார். அவரை பாரத மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி தீர்த்தனர்.

பதக்கங்களை குவித்த வீரர் வீராங்கனைகளுக்கு பல மாநிலங்கள் ஊக்கத்தொகை பரிசுத்தொகை என வாரி வழங்கின. கேரளா மட்டும் இந்திய ஹாக்கி அணிக்கு கைத்தறி துணிகளை அனுப்பியதோடு நின்றுவிட்டது. ஆனால் மக்கள் தங்கள் கொண்டாட்டங்களை பல வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

`

அதன் ஒரு பகுதியாக தெற்கு குஜராத்தின் பரூச்சில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் உரிமையாளர் நீரஜ் என்ற பெயரில் உள்ள அனைவருக்கும் 501 ரூபாய் மதிப்புள்ள பெட்ரோலை இலவசமாக வழங்கினார். இந்த சலுகை நேற்று ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 9 மாலை 5 மணி வரை இருந்தது.

```
```

இந்த அறிவிப்பு பலகையை பம்ப் உரிமையாளர் தனது பம்ப்பில் வைத்திருந்தார். இந்த சலுகையைப் பெற பயனாளியானவர் தனது அடையாளச் சான்றைக் காட்ட வேண்டும். அப்படி காண்பிக்கப்பட்ட சான்று சரியானது எனில் 501 ரூபாய்க்கான பெட்ரோலை அளித்தனர்.

…உங்கள் பீமா