2-1-22/15.30pm
காஷ்மீர் : இந்திய எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து கொன்று குவித்து வரும் பாகிஸ்தானிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் அவ்வப்போது பதில்தாக்குதல் நடத்தி கொன்று வருகிறது.

நேற்று புத்தாண்டை முன்னிட்டு பாகிஸ்தானிய வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கிய இந்திய ராணுவத்திற்கு பரிசாக இந்திய வீரர்களை கொல்ல பாகிஸ்தான் தனது தீவிரவாதிகளை ஏவியுள்ளது. காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை ஒட்டியுள்ள கெரன் செக்டர் எனும் இடத்தில் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதை இந்திய ராணுவம் கண்டறிந்தது.

அங்குள்ள நமது ராணுவக்குழு நடத்திய துப்பாக்கி தாக்குதலில் முஹம்மத் ஷபிர் மாலிக் என்பவன் கொல்லப்பட்டான். அவனை பரிசோதித்ததில் அவனிடமிருந்து கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பாகிஸ்தான் நோட்டுக்கள் ஒரு ஏ.கே 47 மற்றும் ஏழு கையெறி குண்டுகள் கிடைத்துள்ளன. மேலும் அவனது அடையாள அட்டை அவன் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்தவன் என உறுதிப்படுத்தியது. மேலும் அவன் பாகிஸ்தான் ராணுவ சீருடையில் வந்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி கொல்லும் சம்பவங்கள் முன்னர் அடிக்கடி நடைபெறும். அதுபோன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு மாலிக் போன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த தீவிரவாதிகளே காரணம் என காஷ்மீர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நேற்று இந்தியாவிடம் வாங்கி சாப்பிட்ட இனிப்பு ஜீரணமாகும் முன்னரே பாகிஸ்தான் தனது தீவிரவாதத் தாக்குதலை ஆரம்பித்துவிட்டது. பாகிஸ்தான் மீது கடுமையான நடவடிக்கை இந்திய அரசு எடுக்கவேண்டும் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
……உங்கள் பீமா