Friday, February 23, 2024
Home > செய்திகள் > MMDA ஆறே மாதம் பல கோடி ஊழல்..! வெளியான திடுக்கிடும் பின்னணி..!

MMDA ஆறே மாதம் பல கோடி ஊழல்..! வெளியான திடுக்கிடும் பின்னணி..!

2-1-22/12.05pm

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட MMDA அலுவலகத்தில் இடத்திற்கு அப்ரூவ் கொடுக்க லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாற்றப்படுவதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பத்தூர் எம்.எம்.டி.ஏ ஏ.டியாக இருப்பவர் அண்ணாதுரை. அதே அலுவலகத்தில் வரைபட அதிகாரியாக இருப்பவர் யுவராஜ் . இவர்கள் இருவரும் ப்ரோக்கர்களான பாஷா மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கையில் வைத்துக்கொண்டு சிலகோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுதொடர்பான 1000த்திற்கும் மேற்பட்ட புகார்கள் தன்னிடம் ஆதாரங்களுடன் வந்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருநாவுக்கரசு என்பவர் தெரிவித்துள்ளார். சாதாரணமாக ஒரு லட்சம் சதுர அடிக்கு மேல் வாங்கப்படும் நிலங்களுக்கு மாவட்ட அளவில் அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. அந்த நிலங்கள் அனுமதி பெற சென்னை எம்.எம்.டி.ஏ வை அணுகவேண்டும்.

`

ஆனால் திருப்பத்தூரில் ஒரு லட்சம் சதுர அடிக்கு மேல் நிலத்தை வாங்குபர்களிடம் ப்ரோக்கர்கள் பாஷா மற்றும் அன்பு மூலமாக பேசி அனுமதி கிடைப்பதில் காலதாமதமாகும் என்கிற ரீதியில் தவறான தகவல் அளித்து மாவட்ட அளவிலேயே அனுமதி வழங்கிவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக மூன்று லட்சம் சதுர அடி நிலம் வாங்குபவரிடம் ஒருலட்சம் வீதம் மூன்று பத்திரங்களாய் பிரித்து அனுமதி பட்டா அளித்து விடுகின்றனர் என கூறப்படுகிறது.

இதனால் அரசுக்கு செல்லவேண்டிய 2.5 லட்சம் அதிகாரிகள் அண்ணாதுரை மற்றும் யுவராஜுக்கு சென்றுவிடுவதாகவும் அரசுக்கு 50000 மட்டுமே செல்வதாகவும் திருநாவுக்கரசு குறிப்பிட்டார். மேலும் இதுகுறித்து முதலமைச்சர் தனிப்பிரிவில் புகாரளித்தும் பயனில்லை எனவும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் அவரை ஈரோட்டில் சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

```
```

இந்நிலையில் கடந்த ஆறு மாத காலத்திலேயே மூன்று கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

…..உங்கள் பீமா