6-11-21/ 6.20am
மாஜி எம்பி ஒருவர் அடுத்த வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி பகுதியே இதனால் பரபரப்புக்குள்ளானது.
நீலகிரி தொகுதி மக்களவை அதிமுக எம்.பி.,யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் முன்னாள் நகராட்சி தலைவரம் கூட. இதனிடையே நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை அன்று முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் ஆடையின்றி வெற்றுடம்புடன் நுழைந்துள்ளார்.
இதை கவனித்து அலறிய அந்த வீட்டின் இருந்தவர்கள் மற்றும் அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்.பியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.. அதன்பின் அவர் நிர்வாணமாக இருப்பதை முழுவதுமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். இது குறித்து குன்னூர் நகர் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. முன்னாள் அ.தி.மு.க எம்.பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி நேற்று குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க முன்னாள் எம்.பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் முழு நிர்வாணமாக இருந்த சம்பவம் நீலகிரி மக்களிடம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
…..உங்கள் பீமா
#exmp #nilgiris #admk #nude #poilce #complaint