Thursday, April 18, 2024
Home > செய்திகள் > 1.5 மில்லியன் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! திருமாவளவனா காரணம்..??

1.5 மில்லியன் இந்தியர்களுக்கு ஏற்பட்ட சோகம்..! திருமாவளவனா காரணம்..??

இந்தியாவில் நாளுக்குநாள் மக்கள்தொகை பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்க்கு பல காரணிகள் முன்வைக்கப்படுகிறது. குடும்பக்கட்டுப்பாடு விஷயத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என கூறப்படுகிறது.

அஸ்ஸாம் உள்ளிட்ட பல மாநிலங்கள் குடும்பக்கட்டுப்பாடு சட்டத்தை கடுமையாக பின்பற்றிவருகிறது. இருந்தாலும் சிறுபான்மையின மக்கள் அதன் தீவிரத்தை உணர்வதில்லை என மாநில அரசுகள் கவலை தெரிவிக்கின்றன. மேலும் அசாம் அரசு குடும்பக்கட்டுப்பாடு சட்டத்தை மதிக்கவில்லை எனில் அரசால் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.

இது ஒரு புறமிருக்க அகதிகளால் ஏற்படும் பாதிப்புகள் சற்று அதிகம் என்றே சொல்கிறார்கள் சமூகவியல் வல்லுநர்கள். ஆப்கான் இலங்கை மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இங்கு நிரந்தர குடியுரிமை கேட்டு போராடுவதும், பலர் சட்டத்துக்கு புறம்பாக ஆதார் மற்றும் ரேசன் கார்டுகள் வாங்கிக்கொண்டு இங்கேயே தங்கிவிடுகின்றனர்.

இதனால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். கடந்த மாதம் ஆகஸ்ட் 2021 ல் மட்டும் 1.5 மில்லியன் இந்தியர்கள் வேலை இழந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

`

இதுகுறித்து CMIE (CENTRE FOR MONITOR INGINDIAN ECONOMY ) வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலையில் 399.38 மில்லியனாக இருந்த வேலைக்கு செல்வோர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 397.78 என குறைந்துள்ளது. ஜூலையில் 6.95% விழுக்காடுகள் இருந்த வேலைவாய்ப்பற்றோர் 8.32% விழுக்காடாக அதிகரித்துள்ளது.

நகரப்பகுதியில் 8.3% சதவிகிதம் இருந்த வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை 9.78 என அதிகரித்துள்ளது. கிராமப்பகுதியில் 6.34% இருந்த வலைவாய்ப்பற்றோர்களின் எண்ணிக்கை 7.64% என அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

```
```

மேலும் ஜூலை மாதத்தில் வேலை தேடுவோர்களின் எண்ணிக்கை 30 மில்லியனாக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் 36மில்லியனாக அதிகரித்துள்ளது என CMIE தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி ஒருபுறம் ஏறிக்கொண்டிருந்தாலும், மேலே குறிப்பிட்ட சில காரணிகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக்கொண்டே போகிறது.

“திருமாவளவன் போன்ற பொருளாதாரம் தெரியாதோர் அகதிகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு குடியுரிமை வேலைவாய்ப்பு என பல சலுகைகளை வழங்க வலியுறுத்துகின்றனர். உற்பத்தி நிறுவனங்கள் பெருகாமல் வேலைவாய்ப்பை உருவாக்குவது கடினம்.

ஏதாவது நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தால் ஸ்டெர்லைட் போல பல போராட்டங்களை முன்னெடுத்து புதிய தொழிற்சாலைகள் தொழில் தொடங்க முட்டு கட்டையாய் நிற்கின்றனர்”. என அதிமுகவின் தென் மாவட்ட தலைவர் ஒருவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

… உங்கள் பீமா