Saturday, July 27, 2024
Home > செய்திகள் > பிரதமர் மோடி உயிருக்கு குறியா..? பயணத்திட்டம் வெளியானது எப்படி..?

பிரதமர் மோடி உயிருக்கு குறியா..? பயணத்திட்டம் வெளியானது எப்படி..?

5-1-21/16.30pm

பஞ்சாப் : பாரத பிரதமர் மோடி சென்ற வாகனம் பாதுகாப்பு காணங்களால் சுமார் 20 நிமிடம் நடுரோட்டில் நிற்கவைக்கப்பட்டதன் பின்னணியில் ஏதாவது சதி இருக்குமா என புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

இன்று பாரதபிரதமர் பஞ்சாப் சென்று பலகோடிக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்தார். மேலும் வீரர்களின் நினைவிடமான ஹுஸைனிவாலா சென்று மரியாதை செலுத்த இருந்தார். அதற்காக இன்று காலை பஞ்சாப் பதிண்டா வந்தடைந்தார். அங்கிருந்து ஹுஸைனிவாலாவுக்கு ஹெலிகாப்டரில் செல்ல தயாராய் இருக்கையில் வானிலை படுமோசமடைந்தது. அங்கேயே 20 நிமிடங்கள் வரை காத்திருந்தார்.

வானிலை இன்னும் மோசமாகவே தரைவழிப்பயணம் என முடிவு செய்யப்பட்டு பஞ்சாப் டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் சரண் சின்னியை தொடர்புகொள்ள முயன்றபோது அவர் போனை எடுக்கவில்லை. அதையடுத்து டிஜிபி சாலைப்பயணத்தின் வழிகள் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்தார்.

அதையடுத்து பிரதமர் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டன. ஹுஸைனிவாலாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மேம்பாலத்தை கடக்க முயலும்போது அங்கெ போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர். அதனால் பிரதமர் வாகனம் முன்னேற முடியாமல் மேம்பாலத்திலேயே 20 நிமிடங்களுக்கு மேலாக நின்றது.

`

பிரதமரின் இந்த பயணம் முன்னரே பஞ்சாப் காங்கிரசுக்கு தெரியப்படுத்தியும் தேவையான பாதுகாப்பு வசதிகளை செய்து தரவில்லை. அதேபோல போராட்டம் நடக்கிறது என்பதை பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் டிஜிபி சொல்லாதது ஏன் எனவும் அப்படி போராட்டம் நடக்கும்போது சிக்கிய பிரதமரை பாதுகாக்க உடனடியாக காவல்துறையினரை பாதுகாப்புக்கு அனுப்பாதது ஏன் எனவும் கேள்வியெழுப்புகின்றனர்.

இந்த களேபரங்களில் 20 நிமிட தாமதமாக மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்குவந்தடைந்தார் பிரதமர் மோடி. இதில் சந்தேகத்துக்குரிய வகையில் சில கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. சாலை மார்க்க பயணம் கடைசி நேரமே முடிவு செய்யப்பட்டு பஞ்சாப் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் போராட்டக்காரர்களுக்கு எப்படி தெரிந்தது.

```
```

அப்படி போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருந்தால் அந்த வழியை பயன்படுத்த பஞ்சாப் காங்கிரசின் காவல்துறை அனுமதித்தது எப்படி. காங்கிரஸ் முதல்வர் சரண் சின்னி போனை எடுக்காதது ஏன் இப்படி பல கேள்விகளை பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் அடுக்குகின்றன. மேலும் சமீபத்தில் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் உயிருக்கு ஆபத்து என்கிற ரீதியிலும் சில காங்கிரஸ் தலைவர்கள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mandatory Credit: Photo by JUSTIN LANE/EPA-EFE/Shutterstock (10422662fe) India’s Prime Minister Narendra Modi arrives at the start of an annual luncheon for heads of state on the sidelines the general debate of the 74th session of the General Assembly of the United Nations at United Nations Headquarters in New York, New York, USA, 24 September 2019. The annual meeting of world leaders at the United Nations runs until 30 September 2019. General Debate of the 74th session of the General Assembly of the United Nations, New York, USA – 24 Sep 2019

இதே போல உத்திரபிரதேச அமைச்சர் அஜய்மிஸ்ரா திடீர் பயணம் இதே சம்பவத்தை போல வாகனங்கள் நிறுத்தப்பட்டு கல்லெறியப்பட்டு பல அசம்பாவிதங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. அந்த லக்கிம் புர் பகுதியும் காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாடுள்ள சீக்கியர்களின் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உள்துறை அமைச்சகம் இதுகுறித்த தெளிவான அறிக்கையை மாநில காங்கிரஸ் அரசிடமிருந்து கேட்டிருக்கிறது. நாட்டின் முக்கிய மற்றும் பிரதம குடிமகனான பிரதமர் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

……உங்கள் பீமா