Thursday, June 20, 2024
Home > செய்திகள் > ஸ்ரீபெரும்புதூர் வரை நீண்ட சீனாவின் கை..! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்

ஸ்ரீபெரும்புதூர் வரை நீண்ட சீனாவின் கை..! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்

4-1-22/17.00pm

சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு நிறுவனத்தில் நடந்த போராட்டத்தில் சீனாவின் பங்கு இருப்பதாக உளவுத்துறை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் பாக்ஸ்கான் எனும் தைவானை சேந்த செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பெண்கள் போராட்டம் வெடித்தது. உணவு தரமற்றதாக இருப்பதாகவும் இருப்பிடம் அசுத்தமாக இருப்பதாகவும் சில பெண்தொழிலாளர்கள் காணாமல் போனதாகவும் கூறி தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு காவல்துறை மூலம் கடும் நடவடிக்கைகள் எடுத்து போராட்டத்தை கலைத்தது. இதுதொடர்பான வதந்திகளை பரப்பியதாக சாட்டை துறை முருகன் மற்றும் வளர்மதி ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியரின் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டனர். இதற்க்கு உளவுத்துறை வேறு காரணத்தை அரசுக்கு அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் உதிரிபாகங்கள் 48% சீனாவிலேயே தயாராகிறது. ஆனால் மத்திய பிஜேபி அரசின் வளர்ந்த நாடுகளுடன் கொண்ட நட்புறவால் குறிப்பிட்டு அமெரிக்க இந்திய உறவு பலப்பட்டு வருவதினால் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய கிளையை இந்தியாவில் துவங்க பெரிதும் முயற்சி செய்து வருகிறது. இது சீனாவுக்கு தலைவலியை கொடுத்திருக்கிறது.

`

இதனால் இங்குள்ள இடதுசாரி ஆதரவாளர்களின் ஆதரவோடு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஏசியன் பெயிண்ட் சன்மார் பாக்ஸ்கான், என்பீல்ட் இண்டியா உள்ளிட்ட பல நிறுவனங்களில் போராட்டத்தை தூண்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதையே உளவுத்துறையும் அறிக்கையாக கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சன்மார் எனும் ஸ்ரீபெரும்புதூர் கிளை நிறுவனம் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க போராட்டத்தால் பல மாதங்களாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

2008ல் காங்கிரசுடன் சீனா போட்ட MOUவே பல இடதுசாரிகளின் போராட்டத்திற்கும் அவர்களின் மேம்பாட்டுக்கும் தீனியாக அமைந்துவிட்டதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாக்ஸ்கான் ஓதப்பட்டது போல கர்நாடகா நரசபுரா பகுதியில் இயங்கிவந்த விஸ்ட்ரான் இன்போகாம் நிறுவனமும் அடிதடி ரகளையில் இழுத்து மூடப்பட்டது. அங்கும் இடதுசாரி தொழிற்சங்க தொழிலாளர்களின் போராட்டமே அவர்களுக்குள் ஏற்பட்ட வன்முறையே காரணமாக அமைந்தது.

```
```

சென்னை மஹிந்திரா சிட்டியில் பெக்கட்ரான் டெக்னலாஜி நிறுவனத்திலும் போராட்டம் நடப்பதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் இங்கிருக்கும் கம்யூனிச ஆதரவாளர்களால் போராட்டம் எனும் பெயரில் இழுத்து மூடப்படுவதாகவும் அதனால் கூலித்தொழிலாளியான எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனவும் ஸ்ரீபெரும்புதூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

பாக்ஸ்கான் போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளர் கூடம் அமைப்பை சேர்ந்த வெங்கட நரசிம்மன் என்பவர் சீனா பற்றிய கூற்றை அறவே மறுத்தாலும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நிறுவனத்திற்கு சென்று மேற்பார்வையிட்டு குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்திருந்தாலும் இடது சாரிகளின் சீன விசுவாசமே வெற்றிபெற்றிருக்கிறது என தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த பெயர்சொல்ல விரும்பாத ஒருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மூடப்பட்ட நிறுவனங்கள் குறித்தும் போராட்டம் தூண்டப்படும் நிறுவனங்கள் குறித்தும் உளவுத்துறை தமிழக அரசிற்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்த்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக திமுக அரசு கூட்டணி என்கிற வலையில் வீழாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என எதிர்க்கட்சிகள் கருத்து கூறுகின்றனர்.

……உங்கள் பீமா