Monday, January 30, 2023
Home > செய்திகள் > பாலியல் விழிப்புணர்வு…! அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர்..!

பாலியல் விழிப்புணர்வு…! அமைச்சர் அன்பில் மகேஷ் பகீர்..!

5-1-21/12.50pm

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை விழுப்புரம் செங்கல்பட்டு மற்றும் கடலூர் மண்டலங்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நேற்று நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவரிடம் பள்ளிகளில் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்து மீறல்களை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ் மேலும் “பள்ளிபாடபுத்தகங்களில் பாலியல் விழிப்புணர்வு குறித்த பாடங்கள் இடம்பெற மேலும் சில பக்கங்கள் ஒதுக்க ஆய்வு செய்து வருகிறோம் என குறிப்பிட்டார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூறுகையில் இந்த முடிவு வரவேற்கப்பட கூடிய ஒன்றுதான். ஆனால் குடியரசுதினத்தையே சுதந்திரதினம் என மாற்றி அரசு இணையதளத்தில் வெளியிட்ட திமுக இதை எப்படி நடைமுறை படுத்தப்போகிறது என கேள்வியெழுப்புகின்றனர்.

`

மேலும் நெட்டிசன்கள் இதுகுறித்து கிண்டலடித்து வருகின்றனர். மகளிர் அணியினரை சொந்த கூட்டத்திலேயே இடுப்பை கிள்ளிய திமுகவினர் முதலில் பாலியல் விழிப்புணர்வு பாடத்தை கற்றுக்கொள்ளட்டும். பெண்களிடம் எப்படி நடக்கவேண்டும் என திமுகவினர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு பாலியல் விழிப்புணர்வு பற்றிய பாடத்தை பள்ளிகளில் நடத்தலாம் என விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா