Wednesday, March 19, 2025
Home > அரசியல் > வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்..! மலராது என சொன்ன திமுக..! மலர வைத்த தமிழக மக்கள்..!

வெற்றி வேட்பாளர்கள் பட்டியல்..! மலராது என சொன்ன திமுக..! மலர வைத்த தமிழக மக்கள்..!

23-2-22/10.30am

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிடக்கட்சிகளுக்கு பலத்த போட்டியை கொடுத்து தமிழகத்தில் மூன்றாவது பெரியக்கட்சியாக பிஜேபி உருவெடுத்துள்ளது. இது தமிழக மக்கள் பிஜேபி மீது வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக பிஜேபியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதிமுகவுடனான கூட்டணிபேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத நிலையில் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பிஜேபி தலைவர் அண்ணாமலை தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அந்த நான்கு நாட்களுக்குள் 5480 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மக்களுக்கு பரிச்சயமில்லாத இளம் வேட்பாளர்களை களமிறக்கிய பிஜேபி வெறும் 18 நாட்கள் கடின உழைப்பில் மக்களின் பேராதரவை பெற்று 308 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

`

இது திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. சென்னையில் மட்டும் 198வார்டுகளில் போட்டியிட்ட பிஜேபி 2.14,245 வாக்குகள் பெற்று இரண்டாவது பலம்வாய்ந்த கட்சியாக மாறியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 2.82 கோடி வாக்குகளில் 1.69கோடி வாக்குகளே பதிவாகியுள்ளன. இதில் பிஜேபி ஒன்பது லட்சம் வாக்குகள் பெற்றுள்ளது.

மாநகராட்சியில் 22 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள், பேரூராட்சியில் 230 வார்டுகள் என 308 வார்டுகளை பிஜேபி கைப்பற்றியுள்ளது.

```
```

மொத்தமுள்ள 12838 வார்டுகளில் 5480ல் மட்டுமே போட்டியிட்ட பிஜேபி 12.49% வாக்குகளை பெற்றிருப்பது பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

…..உங்கள் பீமா