அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தனியார்தொலைக்கட்சிக்கு அளித்த பேட்டியில் திமுக ஆட்சியை கடும் விமர்சனம் செய்தார். “நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு மொட்டை அடிக்கிறது. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள் என மக்களுக்கும் தெரியும்.
வரப்போகிற ஊராட்சி தேர்தலில் இது பிரதிபலிக்கும். மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது. திருநெல்வேலியில் காவல்துறை இன்னும் தலையை தேடிக்கொண்டிருக்கிறது. ஊனமுற்ற ஒருவரை கஞ்சா கும்பல் வேதிக் கொன்றது. ராமநாதபுரம் பகுதியில் கொள்ளையர்கள் பெட்ரோல் பல்க்கில் புகுந்து திருடுகிறார்கள். கொலை கொள்ளை என சமூக குற்றங்கள் பெருகிவிட்டன”. என தெரிவித்தார்.
``````
`
…உங்கள் பீமா