Friday, March 29, 2024
Home > அரசியல் > பிஜேபி வெற்றி நிலவரம் : திமுகவுக்கு அதிர்ச்சியளித்த பிஜேபி..!

பிஜேபி வெற்றி நிலவரம் : திமுகவுக்கு அதிர்ச்சியளித்த பிஜேபி..!

22-2-22/16.30pm

சென்னை : தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் பிஜேபி திராவிட கட்சிகளுக்கு பலத்த போட்டியை உருவாக்கியுள்ளது. சென்னையில் பல இடங்களில் பிஜேபி இரண்டாவது இடத்தில் வந்து திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துக்கொண்டிருக்கிறது.

இதனிடையே தற்போதைய நிலவரப்படி பிஜேபி பல இடங்களில் இரண்டாவது நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநகராட்சியில் உள்ள 1374வார்டுகளில் போட்டியின்றி 4 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு மாநகராட்சி வார்டில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சியில் திமுக 632 இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

அதிமுக 113 இடங்களையும் பிஜேபி 10 இடத்தையும் கைப்பற்றியிருக்கின்றன. கம்யூனிஸ்ட் குழுமங்கள் 22 இடத்தையும் காங்கிரஸ் குழுமம் 50 இடத்தையும் வென்றெடுத்துள்ளன. மொத்தமுள்ள 3843 நகராட்சி வார்டுகளில் போட்டியின்றி 18பி பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒரு இடத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

`

நகராட்சியில் திமுக 2215 இடங்களை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக 605 இடங்களையும் பிஜேபி 49 இடங்களையும் வென்றிருக்கின்றன. காங்கிரஸ் குழுமம் 143 இடத்திலும் கம்யூனிஸ்ட் குழுமம் 67 இடங்களிலும் தேமுதிக 11 இடங்களிலும் வென்றிருக்கிறது. பேரூராட்சியில் உள்ள 7621 வார்டுகளில் 196 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். நான்கு இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சியில் அதிமுக 1206 இடங்களிலும் திமுக 4384 இடங்களிலும் பிஜேபி 229 இடங்களிலும் வெற்றபெற்றிருக்கின்றன. கம்யூனிஸ்ட் குழுமம் 127 இடங்களிலும் காங்கிரஸ் குழுமம் 367 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தேமுதிக 23 இடங்களிலும் வென்றுள்ளன. மாநகராட்சியில் மற்றவை 75 இடங்களிலும் நகராட்சியில் 533 இடத்திலும் பேரூராட்சியில் 1258 இடத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

```
```

வெறும் 40 சதவிகித வேட்பாளர்களை மட்டுமே களமிறக்கிய பிஜேபி தற்போதுவரை 287 இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

…..உங்கள் பீமா